உங்கள் வருமானத்துக்கு ஏற்ற கிரெடிட் கார்டு வரம்பு எவ்வளவு? எப்படி கணக்கிடுவது?
Income vs Credit Limit : உங்கள் வருமானத்துக்கேற்ற கிரெடிட் கார்டு வரம்பு எவ்வளவு என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். வங்கி, உங்கள் மாத வருமானம், கடன் வரலாறு, கிரெடிட் ஸ்கோர் மற்றும் செலவுகளைப் பொருத்து கிரெடிட் கார்டு வரம்பை நிர்ணயிக்கிறது. இந்த கட்டுரையில் மாத வருமானத்தின் அடிப்பைடையில் கிரெடிட் ஸ்கோர் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இன்றைய சூழலில், கிரெடிட் கார்டு (Credit Card) என்பது ஒரு முக்கியமான நிதி ஆதாரமாக மாறியுள்ளது. ஷாப்பிங், விமான டிக்கெட், ஹோட்டல் புக்கிங் , ஆன்லைன் ஷாப்பிங் (Online Shopping)போன்ற பல பரிவர்த்தனைகளில் கிரெடிட் கார்டுகள் பயனுள்ளதாக இருக்கிறது. காரணம், ரிவார்ட்ஸ் பாயிண்ட்கள், ஆஃபர்கள் என மிகப்பெரிய சேமிப்பை கிரெடிட் கார்டுகள் வழங்குகின்றன. கிரெடிட் கார்டை சரியான முறையில் பயன்படுத்தினால் அதனால் நமக்கு நன்மைகளே அதிகம்.இதனால் மாத செலவில் குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும். இந்த நிலையில் கிரெடிட் கார்டை தேர்வுசெய்யும்போது, கிரெடிட் வரம்பு (Credit Limit) குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கிரெடிட் கார்டு வரம்பு என்பது நாம் செலவு செய்ய வேண்டிய தொகையின் அளைவைக் குறிக்கும்.
இது உங்கள் மாத வருமானம், கிரெடிட் ஸ்கோர், கடனை திரும்பு செலுத்தும் பழக்கம் மற்றும் ஏற்கனவே உள்ள கடன்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து வங்கிகள் நிர்ணயிக்கின்றன. குறிப்பாக நம் மாத வருமானம் இதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த கட்டுரையில் மாத வருமானத்துக்கு ஏற்ற கிரெடிட் கார்டு வரம்பு எவ்வளவு? அதனை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு வரம்பு என்பது, நீங்கள் அந்த கார்டின் மூலம் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக கடனாகப் பெறக்கூடிய தொகைதான். இந்த வரம்பு உங்கள் மாத வருமானம், கிரெடிட் ஸ்கோர், கடனை செலுத்தும் பழக்கம் மற்றும் ஏற்கனவே உள்ள கடன்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து வங்கிகள் நிர்ணயிக்கின்றன. அதிக கிரெடிட் வரம்பு சில நேரங்களில் நன்மையாக இருக்கும். ஆனால் எல்லா நேரமும் அப்படி இல்லை. அதிக வரம்பு இருந்தால் செலவுகள் கூட வாய்ப்பு இருக்கிறது. அதே போல கிரெடிட் கார்டு வரம்புகள் மிகக் குறைவாக இருந்தால், முக்கிய தேவைகளையே கையாள முடியாத நிலை ஏற்படலாம். எனவே உங்கள் வருமானத்துக்கும் செலவு செய்யும் முறைக்கு ஏற்ப சரியான வரம்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதையும் படிக்க: கிரெடிட் கார்டு பயனர் உயிரிழந்துவிட்டால் கடனை யார் திருப்பி செலுத்த வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
சரியான கிரெடிட் கார்டு வரம்பை எப்படி கணக்கிடுவது?
- உங்கள் மாத வருமானத்தை மதிப்பீடு செய்யுங்கள். கிரெடிட் கார்டுகள் வழங்கும் முன் வங்கிகள் முதலில் உங்கள் வருமானத்தை கணக்கிடுகின்ரன. பொதுவாக , உங்கள் மாத வருமானத்தின் 2 முதல் 3 மடங்கு வரம்பு வரை இருக்கலாம். உதாரணமாக, நீங்கள் மாதம் ரூ.60,000 சம்பாதித்தால், ரூ.1.2 லட்சம் முதல் ரூ.1.8 லட்சம் வரம்பு ஏற்றதாகக் கருதப்படுகிறது.
- மாத செலவுகளை கவனியுங்கள். வாடகை, மின் கட்டணம், இஎம்ஐ (EMI), உணவுப்பொருட்கள் போன்ற தினசரி செலவுகளுக்கு ஏற்ற அளவுக்கு கிரெடிட் வரம்பு இருக்க வேண்டும். அதே நேரத்தில், அவசியமில்லாத செலவுகளை கட்டுப்படுத்தவும் கவனிக்க வேண்டும்.
இதையும் படிக்க: சம்பளம் அதிகரித்தால் சிபில் ஸ்கோர் அதிகரிக்குமா? உண்மை என்ன?
- டெபிட் இன்கம் ரேஷியோவை பொறுத்து முடிவு செய்யப்படும். அதாவது உங்கள் வருமானத்தில் எவ்வளவு பங்கு ஏற்கனவே கடன் திரும்ப செலுத்துவதில் செலவாகிறது என்பதைக் காட்டுகிறது. இந்த விகிதம் அதிகம் இருந்தால், குறைவான கிரெடிட் வரம்பு போதுமானது.
- உங்கள் வரம்பில் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்பது இந்த விகிதத்தை காட்டுகிறது. பொதுவாக இந்த விகிதம் 30 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டும். உதாரணமாக ரூ.1 லட்சம் வரம்பில் இருந்தால் ரூ.50,000 செலவழித்தால், உங்கள் கிரெடிட் பயன்பாடு 50 சதவிகிதமாக உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம்.
- அதிகமாக பயணம் செய்வோர், ஆன்லைன் ஷாப்பிங், ரெஸ்டாரண்ட் செலவுகள் அதிகமாக இருப்பின் உங்கல் கிரெடிட் கார்டு வரம்பு அதிகமாக இருக்கலாம். மாறாக வீடு வாங்குது, கல்வி செலவுகள் போன்ற நீண்ட கால இலக்குகள் இருப்பவர்களுக்கு குறைவான வரம்பு செலவு கட்டுப்பாட்டுக்கு உதவும்