Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை.. ரூ.10,000-த்தை நெருங்கிய கிராம்!

Gold Price Rapidly Increased in Chennai | தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர் உயர்வை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 22, 2025) ஒரே நாளில் மட்டும் ரூ.2,200 உயர்த்துள்ளது. இதன் காரணமாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தங்கம் விலை அடைந்துள்ளது.

ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை.. ரூ.10,000-த்தை நெருங்கிய கிராம்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 22 Apr 2025 11:58 AM

சென்னை, ஏப்ரல் 22 : தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாகவே கடும் உயர்வை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 22, 2025) ஒரே நாளில் உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 வரை உயர்ந்துள்ளது. இந்த அபார விலை உயர்வு காரணமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,000-த்தையும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.75,000-த்தை நெருங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால் தங்கம் எட்டா கனியாக மாறிவிடுமோ என சாமானிய மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கம் விலை

2024 ஆம் ஆண்டு தங்கம் விலை சுமார் 30 சதவீதம் வரை விலை உயர்வு அடைந்தது. அதனை தொடர்ந்து 2025-லும் தங்கம்  மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,000-த்தை எட்டும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தனர். தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த தொடர் தங்கம் விலை உயர்வு உள்ளது.

வெறும் 10 நாட்களில் ரூ.4,000 உயர்ந்த தங்கம் விலை

  • ஏப்ரல் 13, 2025 – ஒரு கிராம் தங்கம்  ரூ.8,770-க்கு ஒரு சவரன் ரூ.70,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 14, 2025 – ஒரு கிராம் தங்கம்  ரூ.8,755-க்கு ஒரு சவரன் ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 15, 2025 – ஒரு கிராம் தங்கம்  ரூ.8,770-க்கு ஒரு சவரன் ரூ.70,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 16, 2025 – ஒரு கிராம் தங்கம்  ரூ.8,720-க்கு ஒரு சவரன் ரூ.69,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 17, 2025 – ஒரு கிராம் தங்கம்  ரூ.8,815-க்கு ஒரு சவரன் ரூ.70,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 18, 2025 – ஒரு கிராம் தங்கம்  ரூ.8,920-க்கு ஒரு சவரன் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 19, 2025 – ஒரு கிராம் தங்கம்  ரூ.8,945-க்கு ஒரு சவரன் ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 20, 2025 – ஒரு கிராம் தங்கம்  ரூ.8,945-க்கு ஒரு சவரன் ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 
  • ஏப்ரல் 21, 2025 – ஒரு கிராம் தங்கம்  ரூ.9,015-க்கு ஒரு சவரன் ரூ.72,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 
  • ஏப்ரல் 22, 2025 – ஒரு கிராம் தங்கம்  ரூ.9,290-க்கு ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இன்று (ஏப்ரல் 22, 2025) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,290-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு 1 மில்லியன் டாலர் கடன் வழங்கிய ஐஎம்எஃப்
பாகிஸ்தானுக்கு 1 மில்லியன் டாலர் கடன் வழங்கிய ஐஎம்எஃப்...
பாகிஸ்தான் 26 இடங்களில் டிரோன் தாக்குதல் - இந்தியா பதிலடி
பாகிஸ்தான் 26 இடங்களில் டிரோன் தாக்குதல் - இந்தியா பதிலடி...
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல்
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல்...
விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?...
ஜி.வி. பிரகாஷ்- கயாடு லோஹரின் இம்மோர்டெல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்
ஜி.வி. பிரகாஷ்- கயாடு லோஹரின் இம்மோர்டெல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்...
பருக்கள் இல்லா சருமம் பெற வேம்பு மஞ்சள் சோப்பு தயாரிப்பது எப்படி?
பருக்கள் இல்லா சருமம் பெற வேம்பு மஞ்சள் சோப்பு தயாரிப்பது எப்படி?...
மதுரை சித்திரை திருவிழாவுக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு...
மதுரை சித்திரை திருவிழாவுக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு......
இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!
இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!...
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு...
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!...
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!...