EPFO : பணியில் இருந்து விலகிய பிறகு பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?.. விதிகள் கூறுவது என்ன?
PF Money Withdrawing After Relieving From Job | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஊழியர்கள் தங்களது தேவைகளுக்காக பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பணியில் இருந்து விலகிய பிறகு ஊழியர்கள் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாமா, அதற்கான விதிகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
தமிழகத்தில் பணியாற்றும் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் துறை ஊழியர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) பல சிறப்பு பலன்களை வழங்கி வருகிறது. குறிப்பாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம், ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, அந்த தொகையை பிஎஃப் (PF – Provident Fund) கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணம் பிஎஃப் கணக்கில் இருக்கும் வரை அந்த தொகைக்கான வட்டியும் வழங்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர்கள் தங்களது பணத்தை எடுக்கவே இல்லையென்றால் வட்டியுடன் சேர்த்து கூடுதல் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க அனுமதி வழங்கும் இபிஎஃப்ஓ
ஊழியர்கள் தங்களது பணி காலத்தின் போது பிஎஃப் தொகையை எடுக்க விரும்பினால், அதற்காக விண்ணப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். பிஎஃப் பணத்தை அவசர தேவைகளுக்காக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக திருமணம், கல்வி, வீடு கட்டுதல் உள்ளிட்ட தேவைகளுக்காக பணம் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இபிஎஃப்ஓ ஊழியர்களுக்கு இத்தகைய அனுமதிகளை கொடுத்தாலும் சிலர் பிஎஃப் பணத்தை எடுக்காமல் உள்ளனர். திடீரென வேலை போகும் நிலையில் அல்லது ஏதேனும் அவசர தேவைகளுக்காக அவர்கள் பணத்தை எடுத்துக்கொள்கின்றனர்.
பணியில் இருந்து விலகியபோதும் பிஎஃப் பணத்தை எடுக்கலாமா – விதிகள் கூறுவது என்ன?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பயனர்கள் தாங்கள் பணி செய்யும் இடத்தில் இருந்து வெளியேறிய பிறகும் பிஎஃப் தொகையை எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளின் அடிப்படையில் தான் பணம் எடுக்க அனுமதி வழங்கப்படும். பொதுவாக ஊழியர் தான் பணி செய்யும் இடத்தில் இருந்து வெளியேறிய பிறகு இரண்டு மாதங்கள் கழித்து தான் பணம் எடுக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், சில சமயங்களில் இந்த விதிகளில் விலக்கு அளிக்கப்படும்.
உதாரணமாக இபிஎஃப்ஓவில் பங்களிக்கும் ஊழியர்கள் வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்தாலோ அல்லது பெண்கள் திருமணத்திற்காக தனது வேலையை ராஜினாமா செய்தாலோ காத்திருப்பு காலம் தள்ளுபடி செய்யப்படும். இத்தகைய சூழல்களில் பயனர்களுக்கு உடமடியாக பணத்தை வழங்க அனுமதி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.