மறுபடியும் திறக்கப்படும் அல்காட்ராஸ் தீவு சிறை? டிரம்ப்பின் அதிரடி உத்தரவு – காரணம் என்ன?

Trump’s Bold New Move : அமெரிக்காவின் பழமையான தீவு சிறைச்சாலையான அல்காட்ராஸை மீண்டும் திறக்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். மிகவும் மோசமான குற்றவாளிகளை தடுக்க அவர் இந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவரது இந்த நடவடிக்கைக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மறுபடியும் திறக்கப்படும் அல்காட்ராஸ் தீவு சிறை? டிரம்ப்பின் அதிரடி உத்தரவு - காரணம் என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப்

Published: 

06 May 2025 17:10 PM

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump),  குற்றவாளிகளை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட, புகழ்பெற்ற அல்காட்ராஸ் (Alcatraz) தீவில் உள்ள சிறையை மீண்டும் திறக்க வேண்டும் என அமெரிக்க அரசுக்கு அவர் பரிந்துரை செய்துள்ளார். மேலும் அமெரிக்காவில் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும், ஆபத்தான குற்றவாளிகளை தனிமைப்படுத்தி, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம் என அவர் விளக்கமளித்துள்ளார். இந்த தீவுச்சிறை, சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் அமைந்துள்ள சிறிய தீவில் இருக்கிறது. முன்பு இங்கு கடுமையான குற்றவாளிகள் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அல்காட்ராஸ் சிறை மூடப்பட்டதற்கான காரணம்?

அல்காட்ராஸ் சிறை 1963-ஆம் ஆண்டு மூடப்பட்டது. அதன் பராமரிப்பு செலவுகள் மிகவும் அதிகம் எனவும் மேலும் தீவுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வது சிரமமான ஒன்று எனவும் அதனால் தான் தற்போது சிறை மூடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்போது அது ஒரு பழமைவாய்ந்த பார்க் மற்றும் சுற்றுலா தலமாக செயல்படுகிறது.

எளிதில் தப்ப முடியாத சிறை

அல்காட்ராஸ் (Alcatraz) சிறை, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு சிறிய தீவில் அமைந்துள்ளது. கடற்கரையில் இருந்து 2 கிமீ தூரத்தில் இருக்கும் இந்த தீவு, பல ஆண்டுகளாக அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பு மிகுந்த சிறையாக இருந்தது. இந்த அல்காட்ராஸ் சிறை 1934 முதல் 1963 வரை செயல்பட்டிருக்கிறது. அல்காட்ராஸ் சிறையை யாரும் தப்ப முடியாத சிறை என அழைக்கின்றனர். இந்த சிறையில் 36 கைதிகள் தப்ப முயற்சித்திருக்கின்றனர். ஆனால் அதில் பெரும்பாலானோர் மீண்டும் பிடிபட்டனர். ஒரு சிலர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர்.

அமெரிக்காவின் சட்ட ஒழுங்கை நிறைவேற்றுவதற்காக  அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த சிறையை மீண்டும் திறக்க விரும்புகிறார் என்று கூறப்படுகிறது. முன்பு அந்த சிறை செயல்பட்டபோது ஆபத்தான குற்றவாளிகளை எளிதில் வெளியே விடாமல் பாதுகாக்க முடிந்தது. அதனால் நாட்டில் குற்றங்கள் குறைந்தது. தற்போது குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அந்த சிறையை மீண்டும் திறப்பது சரியாக இருக்கும் என அவர் கருதுகிறார்.

இதற்கிடையே, அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் நென்சி பெலோசி, டிரம்ப்பின் இந்த யோசனையை விமர்சித்துள்ளார். “அல்காட்ராஸ் தற்போது ஒரு சுற்றுலா தளமாக செயல்படுகிறது, அதை மீண்டும் சிறையாக மாற்றுவது சாத்தியமற்றது என்று அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க மக்கள் பலரும் அவரது கருத்துகளை விமர்சித்து வருகின்றனர்.