Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Joe Biden : முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு!

Joe Biden Diagnosed with Prostate Cancer | அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பி ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு அவரது உடலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Joe Biden : முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு!
ஜோ பைடன்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 19 May 2025 18:52 PM

அமெரிக்கா, மே 19 : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் (Former President of America) ஜோ பைடனுக்கு (Joe Biden) தீவிரமான புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஆண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான புரோஸ்டேட் (Prostate) என்ற வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே வயது மூப்பு காரணமாக ஜோ பைடன் மறதி உள்ளிட்ட சிக்கல்களை சந்தித்து வந்த நிலையில், ஜோ பைடனுக்கு உள்ள புற்றுநோய் பாதிப்பு எந்த அளவிக்கு தீவிரமானது, அதனால் ஏற்படும் சிக்கல்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்க அதிபராக பதவி வகித்து வந்த ஜோ பைடன்

அமெரிக்காவில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டி டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஏற்கனவே அதிபராக இருந்த டொனால்ட் டிரம்பை வீழ்த்தும் அளவுக்கு அவர் சக்தி படைத்தவராக இருந்தார். அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற்ற நிலையில், 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை அவர் அதிபராக பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், 2024 நவம்பர் மாதத்துடன் பைடபின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மீண்டும் அவர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால், வயது மூப்பு காரணமாக பைடன் கடும் எதிர்ப்புகளை சந்தித்த நிலையில், சொந்த கட்சியினரே அவரை வேட்பாளராக நிற்க கூடாது என வலியுறுத்தினர். அதன்படி, அதிபர் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார். இந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக உள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்

இந்த நிலையில், ஜோ பைடனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில்,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் வகை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் எலும்பு வரை பாதித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ளது என்ன வகை புற்றுநோய்

புரோஸ்டேட் என்பது ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோயின் வகை ஆகும். அமெரிக்காவை பொருத்தவரை 8 ஆண்டுகளுக்கு ஒருவருக்கு இந்த வகை புற்றுநோய் கண்டறியப்படுவதாக கூறப்படுகிறது. இந்த புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப காலத்தில் கண்டறிந்தால் குணப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் இந்த புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?
ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?...
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!...
இறால் சாப்பிடுவீங்களா? இந்த விஷயத்தை கவனிக்க மறக்காதீங்க!
இறால் சாப்பிடுவீங்களா? இந்த விஷயத்தை கவனிக்க மறக்காதீங்க!...
தக் லைஃப் படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ இதோ!
தக் லைஃப் படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ இதோ!...
பைனலாக மாறிய ஐபிஎல் 2025 பைனல் இடம்.. பிசிசிஐ முக்கிய முடிவு!
பைனலாக மாறிய ஐபிஎல் 2025 பைனல் இடம்.. பிசிசிஐ முக்கிய முடிவு!...
பச்சை மிளகாய் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையுமா?
பச்சை மிளகாய் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையுமா?...
என்னால் அவருடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியல - மமிதா பைஜூ!
என்னால் அவருடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியல - மமிதா பைஜூ!...
40 தொகுதிகளை கேட்கும் பாஜக.. தீவிர ஆலோசனையில் அதிமுக..
40 தொகுதிகளை கேட்கும் பாஜக.. தீவிர ஆலோசனையில் அதிமுக.....
ரூ.9000 தள்ளுபடியில் ரெட்மி நோட் 14 ப்ரோ: இவ்ளோ தான் விலையா?
ரூ.9000 தள்ளுபடியில் ரெட்மி நோட் 14 ப்ரோ: இவ்ளோ தான் விலையா?...
தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் விளக்கம்!
தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் விளக்கம்!...
கும்பத்தில் இணைந்த ராகு -சந்திரன்.. இந்த 5 ராசிக்கு நல்ல காலம்!
கும்பத்தில் இணைந்த ராகு -சந்திரன்.. இந்த 5 ராசிக்கு நல்ல காலம்!...