Bay of Bengal : வங்கக்கடலில் நிலநடுக்கம்.. 4.5 ரிக்டர் அளவாக பதிவு!
Minor 4.5 Magnitude Earthquake Strikes Bay of Bengal | கடந்த சில நாட்களாக உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதனபடி, இன்று (மே 19, 2025) அதிகாலை வங்கக்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை, மே 19 : வங்கக்கடலில் (Bay of Bengal) இன்று (மே 19, 2025) அதிகாலை திடீர் நிலலடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 12.45 மணி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 4.5 ரிக்டர் அளவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது . இந்த நிலநடுக்கம் கடலில் ஏற்பட்டுள்ளதால் அது எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிகழும் நில நடுக்கங்கள்
உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மியான்மரில் ஏற்பட்ட சக்தியாந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில், அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மியான்மரை தொடர்ந்து அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட மேலும் சில பகுதிகளிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிகாலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்
EQ of M: 4.5, On: 19/05/2025 00:45:24 IST, Lat: 19.02 N, Long: 93.35 E, Depth: 55 Km, Location: Bay of Bengal.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/TAxvpEdaNW— National Center for Seismology (@NCS_Earthquake) May 18, 2025
இந்த நிலையில், இன்று (மே 19, 2025) அதிகாலை வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தேசிய நில அதிர்வு மையம், இன்று அதிகாலை 12.45 மணி அளவில் வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அதாவது, வங்கக்கடலில் சுமார் 55 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தின் அளவு 4.5 ரிக்டராக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விலைவுகள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.