கொல்லப்பட்ட 20,000 மக்கள்.. ஐ.நா.கவுன்சிலில் கொதித்தெழுத்த இந்தியா.. உற்று பார்த்த பாகிஸ்தான்!
India Pakistan Conflict : பயங்கரவாதம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானை இந்தியா கண்டித்துள்ளது. அதோடு, சிந்து நதி நீர் ஒப்புந்தம் குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதில் கொடுத்துள்ளது. குறிப்பாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது பாகிஸ்தான்தான் என்றும் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
அமெரிக்கா, மே 24 : பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் 20 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியும், தூதர் பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் பயங்கரவாத பிரச்னை குறித்து இந்தியா முக்கியமான கருத்தை பேசியுள்ளது. மேலும், பாகிஸ்தானை கடுமையாகவும் இந்தியா விமர்சித்திருந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான விவாதம் 2025 மே 23ஆம் தேதியான நேற்று நடந்தது. இந்த விவாதத்தின் போது, இந்தியா பயங்கரவாதம் குறித்து பேசியுள்ளார். தண்ணீர் என்பது உயிர், போரின் ஆயுதம் அல்ல என்று பாகிஸ்தான் கூறியதை அடுத்து, அவர் இந்தியா விளக்கம் அளித்தது. அப்போது, இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் பேசுகையில், “இந்தியா எப்போதும் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது.
”கொல்லப்பட்ட 20,000 பேர்”
இந்தியா 65 ஆண்டுகளுக்கு முன்பு நல்லெண்ணத்துடன் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தம் நட்புறவுன் செய்யப்பட்டது. ஆறரை தசாப்தங்களாக, பாகிஸ்தான் மூன்று போர்களையும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்களையும் இந்தியா மீது நடத்துவதன் மூலம் அந்த ஒப்பந்தத்தின் உணர்வை மீறியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதலில் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அவற்றில் மிகச் சமீபத்தியது கடந்த மாதம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் ஆகும். இந்த காலக்கட்டத்தில் இந்தியா பொறுமையுடன் இருந்தது.
இந்த 65 ஆண்டுகளில், எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பயங்கரவாதத்தின் உலகளாவிய மையமாக இருக்கும் பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு முடிவுக்கு கொண்டு வரும் வரை இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்.
ஐ.நா. கவுன்சிலில் பாகிஸ்தானை கண்டித்த இந்தியா
பயங்கரவாதிகளுக்கும் குடிமக்களுக்கும் இடையில் வேறுபாடு காட்டாத ஒரு நாட்டிற்கு, குடிமக்களின் பாதுகாப்பு பற்றிப் பேச எந்த உரிமையும் இல்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது பாகிஸ்தான்தான் என்பது தெளிவாகிறது” என்று கூறினார். 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரு பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதனை அடுத்து, இந்தியா பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம் நிலவியது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது- இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இப்படியே மூன்று நாட்கள் தொடர்ந்து, தற்காலிகமாக 2025 மே 10ஆம் தேதி தாக்குதல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.