திருச்சியில் லேசான சாரல் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?

Jan 12, 2026 | 10:21 PM

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், திருச்சி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பதிவாகியுள்ளது.

இந்த மழையின் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்து, குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. மேலும், வரக்கூடிய அடுத்த சில நாட்களிலும் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.