’நோயாளிகள் அல்ல.. மருத்துவப் பயனாளிகள்’ முதல்வர் ஸ்டாலின் பேச்சு
CM MK Stalin Speech : நோயாளிகளை இனி மருத்துவப் பயனாளிகள் என அழைக்க வேண்டும். முகாமுக்கு வருவோரை கனிவோடும் பணிவோடும் மருத்துவ பணியாளர்கள் நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த பின், இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 02 : நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”கல்வியும், மருத்துவமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள். கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் எண்ணற்ற திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் மக்களுக்கு நிதி உதவி அளித்து மக்களை காக்கும் அரசாக நிரூபித்தோம். நோயாளிகளை இனி மருத்துவப் பயனாளிகள் என அழைக்க வேண்டும். முகாமுக்கு வருவோரை கனிவோடும் பணிவோடும் மருத்துவ பணியாளர்கள் நடத்த வேண்டும்” என்றார்.
Published on: Aug 02, 2025 11:44 AM