பிரதமர் மோடி பிறந்தநாள்.. குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த நயினார் நாகேந்திரன்
PM Modi Birthday : இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17) தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு, குழந்தைகள் தங்க மோதிரங்களை வழங்கினார்.
சென்னை, செப்டம்பர் 17 : இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17) தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், உலகத் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினரும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு, குழந்தைகள் தங்க மோதிரங்களை வழங்கினார்.