தூய்மை பணியாளர்களின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு.. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

| Aug 09, 2025 | 9:11 PM

தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் நேரு இவ்வாறு கூறி உள்ளார்.

திருச்சி, ஆகஸ்ட் 09: திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் செட்டிநாடு வணிக சந்தை கண்காட்சியை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் தீர்வு காணப்படும். பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் செல்போன் டவர் விரைவில் அமைக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்என கூறினார்.

Published on: Aug 09, 2025 09:10 PM