இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் – எமோஷனலாக பேசிய மிஷ்கின்

Jun 29, 2025 | 10:50 PM

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், கௌதம் மேனன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருந்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி 100 நாள் நிறைவடைந்த நிலையில் படக்குழு சார்பாக சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் மிஷ்கின் பங்கேற்காத நிலையில் இது குறித்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய மிஷ்கின் நான் சில ஆண்டுகளாக நடித்து வருகிறேன். ஆனால் இந்தப் படம் தான் என்னை ரசிகர்கள் மனதில் இடம்பெற செய்திருக்கிறது. அதற்காக இயக்குநர் அஸ்வத்திற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர் நல்ல படங்கள் பண்ண வேண்டும். பிரதீப் இனிமையான பையன் என்று பேசினார்.