தமிழ் சமூகத்தை பிடித்த நோயை விரட்டியது திராவிட இயக்கம் தான் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..

Jul 28, 2025 | 9:04 PM

சென்னையில் நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ நூறாண்டுகளையும் கடந்து இந்த செவிலியர் கவுன்சிலிங் நடப்பது என்பது ஒரு வரலாற்று சாதனையாகும். கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது பார்க்கும் இடமெல்லாம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து கேட்டறிந்தனர். அவர் பூரண உடல் நலத்துடன் தற்போது வீடு திரும்பி உள்ளார். அவரது இந்த நேரத்தில் துணையாக நின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு காலத்தில் நோய்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை இருந்தது.

சென்னையில் நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ நூறாண்டுகளையும் கடந்து இந்த செவிலியர் கவுன்சிலிங் நடப்பது என்பது ஒரு வரலாற்று சாதனையாகும். கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது பார்க்கும் இடமெல்லாம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து கேட்டறிந்தனர். அவர் பூரண உடல் நலத்துடன் தற்போது வீடு திரும்பி உள்ளார். அவரது இந்த நேரத்தில் துணையாக நின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு காலத்தில் நோய்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை இருந்தது. ஆனால் இன்று பல்வேறு நோய்களுக்கு தமிழகத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. அதே போல் தான் திராவிட இயக்கமும் சமூகத்தைப் பிடித்த நோயை விரட்டும் வகையில் பெரியார் அறிஞர் அண்ணா சமூக நீதி பற்றி ஊர் ஊராக சென்று எடுத்துரைத்தார்கள். பல நோய்கள் தமிழக சமுதாயத்தை வாட்டி வதைத்த போது முன்களப்பணியாளர்களாக நின்று பணியாற்றியது செவிலியர்கள் தான்” என குறிப்பிட்டுள்ளார்