Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?.. சூப்ரல் அம்சம் இதோ!

UPI Payments Offline | தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமான மக்கள் யுபிஐ சேவையை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் யுபிஐ கை கொடுத்தாலும் சில சமயங்களில் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இணைய வசதி இல்லாமல் யுபிஐ செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதற்கு தீர்வாக இணைய வசதி இல்லாமல் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?.. சூப்ரல் அம்சம் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 02 May 2025 21:22 PM

கையில் பணம் வைத்து செலவு செய்த காலம் எல்லாம் மாறிவிட்டது. தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் யுபிஐ (Unified Payment Interface) பேமெண்ட் முறை மிகவும் பிரபலமாக உள்ளது. தங்களது தேவைகளுக்காக செலவு செய்யும் பொதுமக்கள் அதற்கான பணத்தை யுபிஐ மூலம் அனுப்பிவிடுகின்றனர். இந்தியாவை பொருத்தவரை சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை என அனைத்து இடத்திலும் யுபிஐ பயன்படுத்தப்படுகிறது. இதனால் 1 ரூபாய் முதல் ஆயிரக்கணக்கிலான தொகை வரை பொதுமக்கள் மிக எளிதாக யுபிஐ மூலம் பண பரிவத்தனைகளை மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக அவசர தேவைக்கு கூட யாரும் கையில் பண வைத்திருப்பதில்லை.

யுபிஐ பண பரிவர்த்தனை செய்ய முக்கிய பங்கு வகிக்கும் இணைய வசதி

என்னதான் கையில் பணம் இல்லாமல் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்து வந்தாலும், யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு இணைய சேவை இன்றியமையாததாகும். இணைய சேவை இல்லை என்றால் யுபிஐ செயலிகள் செயல்படாது. இதன் காரணமாக நீங்கள் யாருக்கேனும் பணம் அனுப்ப முயற்சி செய்தால் அந்த நருக்கு பணம் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படும். இத்தகைய சமயங்களில் உங்கள் பணம் வங்கிகளில் மாட்டிக்கொண்டால் அது திரும்ப உங்கள் கணக்கிற்கு வர மூன்று நாட்கள் ஆகும். எனவே இணைய வசதி குறைவாக உள்ள இடத்தில் இணைய வசதி இல்லாமல் யுபிஐ பரிவர்த்தனை செய்யுங்கள்.

இணைய வசதி இல்லாமல் யுபிஐ பயன்படுத்துவது எப்படி?

  1. அதற்கு உங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து *99# என்ற எண்ணுக்கு கால் செய்ய வேண்டும்.
  2. இதற்கு பிறகு பல ஆப்ஷன்கள் உங்களுக்கு தோன்றும். உதாரணமாக பணம் அனுப்புவது, பணம் பெறுவது உள்ளிட்டவை தோன்றும்.
  3. நீங்கள் பணம் அனுப்ப விரும்பினால் 1 என டைப் செய்து அந்த எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
  4. பிறகு நீங்கள் யுபிஐ மூலம் பணம் அனுப்ப போகிறீர்களா, வங்கி விவரங்களை வைத்து பணம் அனுப்ப போகிறீர்களா என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  5. அதில் நீங்கள் மொபைல் எண் மூலம் பணம் அனுப்பும் ஆப்ஷனை தேர்வு செய்தால் நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறீர்களோ அவருடைய மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்.
  6. பிறகு நீங்கள் எவ்வளவு பணம் அனுப்ப விரும்புகிறீர்கள் என்பதை பதிவிட்டு அனுப்ப வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையை பின்பற்றி இணைய வசதி இல்லாமல் மிக சுலபமாக யாருக்கு வேண்டுமானாலும் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் ஜூன் 1ல் திமுக பொதுக்குழு கூட்டம்.. வெளியான அறிவிப்பு
மதுரையில் ஜூன் 1ல் திமுக பொதுக்குழு கூட்டம்.. வெளியான அறிவிப்பு...
இந்தியாவில் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் கிட்டப்பார்வை பிரச்னை!
இந்தியாவில் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் கிட்டப்பார்வை பிரச்னை!...
கோழிக்கோடு மருத்துவமனையில் புகை மூட்டம்.. மூச்சு திணறி 5 பேர் பலி
கோழிக்கோடு மருத்துவமனையில் புகை மூட்டம்.. மூச்சு திணறி 5 பேர் பலி...
ரயில் பயணிகளே கவனியுங்கள்... திருச்சி ரெயில் சேவைகளில் மாற்றம்...
ரயில் பயணிகளே கவனியுங்கள்... திருச்சி ரெயில் சேவைகளில் மாற்றம்......
சுப்மன் கில் கோபம்.. நடுவருடன் அடுத்தடுத்த வாக்குவாதம்..
சுப்மன் கில் கோபம்.. நடுவருடன் அடுத்தடுத்த வாக்குவாதம்.....
மதுரையில் விஜயை பார்க்கச் சென்ற காவலர் சஸ்பெண்ட்!
மதுரையில் விஜயை பார்க்கச் சென்ற காவலர் சஸ்பெண்ட்!...
காக்க காக்க படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க யார் காரணம் தெரியுமா?
காக்க காக்க படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க யார் காரணம் தெரியுமா?...
என்னோட உண்மையான நண்பன் அவர்தான்.. நடிகர் சந்தானம்!
என்னோட உண்மையான நண்பன் அவர்தான்.. நடிகர் சந்தானம்!...
சித்திரைத் திருவிழா... பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடு
சித்திரைத் திருவிழா... பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடு...
கோயிலில் கூட்ட நெரிசல்... 7 பேர் உயிரிழந்த சோகம்!
கோயிலில் கூட்ட நெரிசல்... 7 பேர் உயிரிழந்த சோகம்!...
அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை... இதை செய்ய முதல்வர் உத்தரவு
அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை... இதை செய்ய முதல்வர் உத்தரவு...