Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WhatsApp : ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துவது எப்படி?

Two WhatsApps on a Single Smartphone | தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவது என தெரியாமல் பலர் உள்ளனர். இந்த பதிவில் ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

WhatsApp : ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துவது எப்படி?
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 02 May 2025 19:14 PM

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி தகவல் பரிமாற்றத்திற்கு மிகவும் சிறந்ததாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் வாட்ஸ்அப் செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் செயலியில் ஆடியோ கால், வீடியோ கால், குறுஞ்செய்தி அனுப்புவது உள்ளிட்ட அனைத்திற்கும் வசதி உள்ளது. இவ்வாறு பல தேவைகள் ஒரே இடத்தில் பூர்த்தியாகும் நிலையில் பலரும் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்வது முதல் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுடன் உரையாடுவது வரை பல தேவைகளுக்காக இந்த வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துகிறது.

பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி

சொந்தமாக தொழில் செய்யும் பலரும் பிசினஸ் வாட்ஸ் (Business WhatsApp) செயலியை பயன்படுத்துகின்றனர். இதேபோல பலரும் தங்களது தனிப்பட்ட தேவைகள் மற்றும் தொழில் சார்ந்த தேவைகளுக்கான வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் செயலி பிரதான தகவல் பரிமாற்ற செயலியாக உள்ள நிலையில் பலர் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஒரு செயலி, பொது வாழ்க்கைக்கு ஒரு செயலி என பயன்படுத்துகின்றனர். ஆனால், இரண்டு வாட்ஸ்அப் பயனபடுத்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த வேண்டும் என பெரும்பாலானவர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில்,  ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் செயலி – பயன்படுத்துவது எப்படி?

முன்னதாக இரண்டு வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்த விரும்பும் பயனர்கள் பலர் இரண்டாம் தரப்பு செயலிகளை பதிவிரக்கம் செய்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது வாட்ஸ்அப் செயலியில் வந்துள்ள புதிய அப்டேட் மூலம் ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

  1. அதற்கு, முதலில் வாட்ஸ்அப் செயலிக்கு சென்று அங்கு வலது பக்கத்தில் மேலெ கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
  2. அதில் உள்ள அக்கவுண்ட் (Account) ஆப்ஷனை கிளிக் செய்து, அங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆட் அக்கவுண்ட் (Add Account) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  3. இந்த ஆட் அக்கவுண்ட் ஆப்ஷன் மூலம் உங்களால் ஒரே செயலியில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த முடியும்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையை பின்பற்றி ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை சுலபமாக பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!...
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?...
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்...
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?...
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!...
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!...
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!...
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!...
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?...
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!...