Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!
Kidney Care Foods : இயற்கையாகவே சிறுநீரகங்களை பாதுகாக்க உதவும் சத்துகள் நிறைந்த 5 சிறந்த உணவுகள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தினசரி உணவில் சேர்த்தால், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சீரான செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும். இதுகுறித்து விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

சிறுநீரகங்கள் (Kidney) உடலில் இருந்து கழிவுகளை அகற்றி இரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கிய உறுப்பாக பயன்படுகிறது. நவீன வாழ்க்கை முறையில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் மன அழுத்தம் (Stress) காரணமாக சிறுநீரகப் பிரச்னைகள் அதிகமாகி வருகின்றன. சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிப்பதில் நமது உணவுமுறைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்கள் சிறுநீரகங்களில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும், வீக்கத்தைக் குறைக்கவும், கற்கள் உருவாவதைத் தடுக்கவும் உதவும். குறிப்பாக சில காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சில உணவுகள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பிரச்னைகளைத் தடுக்கவும் உதவுகின்றன. சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஐந்து உணவுகளைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த உணவு. இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் குறைவான பொட்டாசியம் உள்ளதால் சிறுநீரக பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. முட்டைக்கோஸில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகின்றன. இதை சாலடுகள், பொறியல் மற்றும் சூப்கள் வடிவில் உட்கொள்வது சிறந்தது. முட்டைக்கோஸ் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இது சிறுநீரகங்களின் அழுத்தத்தைக் குறைக்கிறது.
பெர்ரி
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுகளாக கருதப்படுகிறது. அவை வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை. பெர்ரிகளில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக இருப்பதால், சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு அவை பாதுகாப்பான தேர்வாக அமைகின்றன. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது. பெர்ரிகளை ஜூஸாகவோ அல்லது சாலடுகளாகவோ சாப்பிடலாம்.
குடைமிளகாய்
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சிவப்பு குடை மிளகாய் சிறந்த உணவு. அவை வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. மேலும் இதில் பொட்டாசியம் குறைவாக உள்ளன. குடை மிளகாயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் சிறுநீரகங்களை அழுத்தத்திலிருந்து பாதுகாக்கின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. குடை மிளகாயை சாலட்களாகவோ, பொறியலாகவோ சாப்பிடலாம்.
பூசணி விதைகள்
பூசணி விதைகள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அவை ஒமேகா 3, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. பூசணி விதைகள் சிறுநீரகங்களின் வீக்கத்தைக் குறைக்கவும், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கவும் உதவுகின்றன. பூசணி விதைகளில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த பூசணி விதைகளை பொடி செய்து சாப்பிடலாம்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்ததாக கருதப்படுகிறது. இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இதில் குறைந்த பொட்டாசியம் மற்றும் சோடியம் இருப்பதால், சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான விருப்பமாகும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. இந்தப் பழம் உடலில் நீர் சமநிலையை பராமரிக்கிறது. இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாறு வடிவில் எடுத்துக்கொள்ளலாம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)