Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரூ.15,000 பட்ஜெட்டில் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்கள் – உங்க சாய்ஸ் எது?

Best Budget 5G Phones: மே மாதத்திற்கான ரூ.15,000க்கும் குறைவான விலையில் சிறந்த 5ஜி போன்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. ரியல்மி, போகோ, ரெட்மி என பல மாடல்கள் பிரீமியம் அம்சங்களுடன் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. வீடியோ, கேமிங், மற்றும் தினசரி பயன்பாட்டுக்கு என தங்கள் விருப்பங்களைப் பொறுத்து தேர்ந்தெடுக்கலாம்.

ரூ.15,000 பட்ஜெட்டில் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்கள் – உங்க சாய்ஸ் எது?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 02 May 2025 17:36 PM

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் (Smartphone) என்பது மிக முக்கியமானதாக மாறியிருக்கிறது. வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram), கேமிங், வீடியோ அழைப்புகள் என அனைத்து அன்றாட தேவைகளுக்கும் ஸ்மார்ட்போன் அவசியம். ஆனால் எல்லோருக்கும் ரூ.20,000 அல்லது ரூ.30,000 மதிப்புள்ள விலையுயர்ந்த போன்களை வாங்க முடியாது. அதனால்தான் கடந்த சில ஆண்டுகளில் ரூ.15,000க்கு கீழ் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட் போன்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவை விலை குறைவாக இருந்தாலும் அதன் செயல்திறன், கேமரா, பேட்டரி, டிஸ்பிளே போன்ற அம்சங்களில் பயனர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்குகின்றன. எதிர்காலத்தில் இணைய பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு 5ஜி சேவையுடன் கிடைக்கின்றன.

இந்த கட்டுரையில், மே 2025-ல் இந்தியாவில் கிடைக்கக்கூடிய ரூ.15,000க்கு கீழ் உள்ள சிறந்த 5ஜி ஸ்மார்ட் போன்கள் பற்றி விரிவாக பார்ப்போம். உங்களுக்கு தேவையான விலை, செயல்திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்களை தேர்ந்தெடுக்கலாம்.

ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3x 5G)

இந்த மாடல் சிறந்த பேட்டரி மற்றும் ஸ்டைலிஷ் லுக்குடன் வருகிறது. 6.72 இஞ்ச் FHD+ டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட இந்த போன் வீடியோக்கள் மற்றும் கேமிங்கிற்கும் சிறந்த அனுபவத்தை அளிக்கிறது. 50எம்பி டபுள் கேமரா, 6,000mAh பேட்டரி மற்றும் MediaTek Dimensity 6400 புராசஸருடன் வரும் இந்த போன் சீரான செயல்திறனை வழங்குகிறது. இதன் விலை ரூ.13,999 என கூறப்படுகிறது.

போகோ எம் 7 புரோ 5ஜி (Poco M7 Pro 5G)

MediaTek Dimensity 7025 Ultra பிராசஸர் மூலம் இயக்கப்படும் இந்த மொபைல், 8ஜிபி வரை RAM ஆதரவுடன் கேமிங், வாட்ஸ்அப், வீடியோ காலிங் உள்ளிட்ட அனைத்து செயல்களுக்கும் சிறந்தது. 6.67-இஞ்ச் AMOLED டிஸ்பிளே, 50எம்பி முதன்மை கேமரா மற்றும் 20 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. 5,110mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கும் உண்டு. இதன் விலை சுமார் ரூ. 14,000 முதல் ரூ.15,000 கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சிஎம்எஃப் போன் 1 பை நத்திங் (CMF Phone 1 by Nothing)

இந்த மொபைலின் ஹைலைட் அதில் உள்ள மாற்றக்கூடிய பின் கவர்கள் என்று கூறப்படுகிறது.. MediaTek Dimensity 7300 பிராசஸரால் இயக்கப்படும் இந்த போன், 6.67-இஞ்ச் Super AMOLED டிஸ்பிளே, 50MP கேமரா மற்றும் 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Nothing OS 3.0 மூலம் இயங்குகிறது. விலை ரூ.15,000 இருக்கும் என்று கூறப்படுகிறது.

ரெட்மி 12 5ஜி (Redmi 13 5G)

20Hz எல்சிடி டிஸ்பிளே, 108எம்பி முதன்மை கேமரா மற்றும் 33 வார்ட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது.   ஜியோமியின் HyperOS, Android 14 அடிப்படையில் இயங்குகின்றது. போனுடன் கூடவே சார்ஜரும் வழங்கப்படுகிறது.

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!...
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?...
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்...
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?...
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!...
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!...
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!...
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!...
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?...
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!...