Amazon Summer Sale: 60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!
Amazon Summer Sale : அமேசான் சாமர் சேல் 2025-ல் முன்னணி பிராண்டுகள் பஜாஜ், கிராம்ப்டன், ஓரியன்ட் மற்றும் சிம்பொனி ஆகியவற்றின் ஏர் கூலர்களுக்கு 60% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஏர் கூலர்கள் பெரிய அறைகள், சிறிய அறைகள் என வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கிடைக்கின்றன.

வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. மே 4, 2025 அன்று அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இந்த நேரத்தில் ஏசி, ஏர் கூலரின் (Air Cooler) தேவை அவசியமாகிறது. எல்லா இடங்களிலும் ஏசி சரியான தேர்வாக இருக்காது. மேலும் நல்ல ஏசியைத் (AC) தேர்வு செய்ய வேண்டும் என்றால் அதன் பட்ஜெட்டும் அதிகமாக இருக்கும். அதற்கு ஏர் கூலர் சரியான தேர்வாக இருக்கும். இந்த நிலையில் ஒரு சரியான ஏர் கூலரை தேர்வு செய்வது மிகவும் முக்கியமான விஷயம். குறிப்பாக அமேசான் சம்மர் சேலில் 2025 (Amazon Summer Sale)இல் இந்தியாவின் முன்னணி பிராண்டுகளான பஜாஜ், கிராம்ப்டன், ஓரியன்ட், சிம்பனி உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் தங்களது ஏர் கூலர்களை அதிரடி தள்ளுபடியில் வழங்குகின்றன. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பஜாஜ் (Bajaj DMH65 Neo)
இந்த ஏர் கூலரில் நீரை சேமிக்க 65 லிட்டர் டேங்க், 90 அடி ஏர் த்ரோ, சிறப்பான கூலிங் அளிக்கும் ஹெக்ஸாகூல் டெக்னாலஜி, ட்யூராமரின் பம்ப், நீருக்கு பதிலாக ஐஸ் கட்டிகள் மூலம் கூலிங் பெறுவதற்கு ஐஸ் சேம்பர் ஆகியவையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனுடன் 3 வருட வாரண்டியுடன் வருகிறது. பெரிய அறைக்கு ஏற்ற தேர்வாக கருதப்படுகிறது. இந்த பிராண்டிற்கு அமேசான் சம்மர் சேலில் 42 சதவிகித தள்ளுபடியுடன் 9,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.
கிராம்ப்டன் (Crompton Ozone 75L)
அதிக நீரை சேமிக்கும் வகையில் 75 லிட்டர் டேங்க், 4200 CMH ஏர் ஃபிளோ, ஆட்டோ ஃபில், தூசிகளைக் கட்டுப்படுத்தும் ரஸ்ட் புரூப், மின்சாரத்தை சேமிக்கும் வகையில் இன்வெர்டர் சப்போர்ட்டுடன் கிடைக்கிறது. இதன் விலை அமேசான் சம்மர் சேலில் ரூ.12, 279க்கு விற்பனையாகிறது.
ஒரியண்ட் (Orient Aerostorm 92L ) – ₹8,799 (48% தள்ளுபடி)
அறை முழுவதும் கூலிங் கிடைக்கும் உயர் ஏர் டெலிவரி, டென்செனெஸ்ட் ஹனிகாம் பேட்ஸ், ஆட்டோ ஃபில், மின்சாரத்தை சேமிக்கும் வகையில் இன்வெர்டர் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கிறது. அமேசான் சம்மர் சேலில் இந்த ஏர் கூலருக்கு 48 சதவிகிதம் தள்ளுபடியுடன் ரூ.8799க்கு கிடைக்கிறது.
பஜாஜ் (Bajaj DMH 115L) – ₹12,868 (32% தள்ளுபடி)
மிகப்பெரிய அறைக்கே ஏற்றது. அதிக நீரை சேமிக்கும் வகையில் 115 லிட்டர் டேங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிக கூலிங் கிடைக்கும் வகையில் ஹெக்ஸாகூல், ஐஸ் சேம்பர், மின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் இன்வெர்டர் மற்றும் 3 வருட வாரண்டியுடன் கிடைக்கிறது. அமேசான் சம்மர் சேலில் இந்த ஏர் கூலருக்கு 32 சதவிகிதம் தள்ளுபடியுடன் ரூ.12,868 விற்பனை செய்யப்படுகிறது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)