ஓடும் ரயிலில் மிடில் பெர்த்து விழுந்து பெண் படுகாயம்.. நடந்தது என்ன?
சென்னை சென்ட்ரல் இருந்து பாலக்காடு வரை செல்லும் விரைவு ரயிலில் லோயர் பெர்த்தில் படுத்திருந்த பெண் மீது மீடில் பெர்த் திடீரென கழன்று விழுந்துள்ளது. இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரயிலில் முதலுதவி பெட்டில் இல்லை என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து, ரத்தம் சொட்டியபடி சேலம் வரை அந்த பெண் பயணித்துள்ளதாக தெரிகிறது.

மிடில் பெர்த் விழுந்து பெண் காயம்
சென்னை, மே 14 : சென்னை – பாலக்காடு விரைவு ரயிலில் மிடில் பெர்த்து விழுந்ததில் கீழ் பெர்த்தில் படுத்திருந்த பெண் படுகாயம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்த வடிந்தபடியே பயணம் மேற்கொண்ட பெண், ரயிலில் முதலுதவி பெட்டி கூடு இல்லை என்று குற்றச்சாட்டி இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாகவும் வெடித்திருக்கிறது. சென்னை முகலிவாகத்தைச் சேர்ந்தவர் சூர்யா. இவரது கணவர் ஜோதி. இவர்கள் இருவரும் தனது மகனுடன் 2025 மே 12ஆம் தேதி இரவு சென்டரில் இருந்து ரயில் ஏறி பயணித்து உள்ளனர். பாலக்காடு விரைவு ரயிலில் பயணம மேற்கொண்டு இருந்தனர். அப்போது, பெண் சூர்யா கீழ் பெர்த்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு மேலே உள்ள நடு பெர்த்தில் இருந்த ஒருவர் அதிகாலை 1.30 மணியளவில் அதிலிருந்து இறங்கினார். அப்போது, எதிர்பாராத விதமாக சங்கிலி கழன்று கீழே விழுந்துள்ளது.
ஓடும் ரயிலில் மிடில் பெர்த்து விழுந்து பெண் படுகாயம்
இதனால், கீழ் பெர்த்தில் படுத்துக் கொண்டிருந்த பெண் சூர்யாவின் மீது விழுந்துள்ளது. இதில், பெண் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். மேலும், அவரது நெற்றியில் இருந்து ரத்தம் வடிந்துக் கொண்டே இருந்தது. இதனால் பதறிப்போன கணவன் ஜோதி, டிக்கெட் பரிசோதகரை அழைத்து முதலுதவி செய்ய வேண்டும் கேட்டு இருக்கிறார்.
ஆனால், ரயிலில் முதலுதவி பெட்டி எதுவும் இல்லை என்று அதிகாரி கூறியிருக்கிறார். இதனால், கோபம் அடைந்த அவர்களிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால், மொரப்பூரில் இறங்கி மருத்துவமனைக்கு செல்லுமாறு அதிகாரிக்ள கூறியிருக்கிறார். ஆனால், இதற்கு அவர்கள் மறுத்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் இல்லாமல் நாங்கள் எப்படி செல்வது என்றும் கூறியிருக்கிறார். இதனை அடுத்து, சேலத்தில் இறங்கிய சூர்யா, அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, வீடு திரும்பினார். ஓடும் ரயிலில் மிடில் பெர்த்து விழுந்து பயணிக்கு படுகாயம் ஏற்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. சம்பவம் குறித்து பதிலளித்த தெற்கு ரயில்வே அதிகாரிகள், விபத்து நடந்த பெட்டியில் உள்ள பெர்த்களை ஒரு குழு ஆய்வு செய்ததாக தெரிவித்தனர். எந்த கோளாறுகளும் இல்லை என்றும் நடு பெர்த்தில் இருந்து இறக்க முயன்ற பயணி, தவறாக கையொண்டதால் பெர்த் விழுந்திருக்கலாம் என அந்த குழு கூறியது. பயணி பெர்த்தை சரியாக இணைக்காமல் இருந்ததால், பெர்த் விழுந்துள்ளது என்று கூறினர். இது குறித்து காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.