முகூர்த்தம், வார விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்து கழகம் அறிவிப்பு
TNSTC Special Buses : முகூர்த்தம் மற்றும் வார இறுதிநாட்களையொட்டி, சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே 16, 17ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சிறப்பு பேருந்துகள்
சென்னை, மே 15 : முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் (TNSTC Buses) இயக்கப்படுகிறது. 2025 மே 16ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து சேவையை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, பண்டிகை நாட்களில் அரசு பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் போககுவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. முன்னதாக, பண்டிகை நாட்களில் மட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, வார இறுதி நாட்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது போக்குவரதது கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அதன்படி, 2025 மே 16ஆம் தேதி (நாளை) முகூர்த்தம், 2025 மே 17ஆம் தேதி சனிக்கிழமை, 2025 மே 18ஆம் தேதி ஞாயிற்று கிழமை என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்தும், இதர இடங்களுக்கும் மற்றும பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, 2025 மே 16ஆம் தேதியான நாளை சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து. திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 570 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
போக்குவரத்து கழகம் அறிவிப்பு
2025 மே 17ஆம் தேதி மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு 605 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மே 16ஆம் தேதி அன்று 100 பேருந்துகளும், 2025 மே 17ஆம் தேதி அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். மாதாவரத்திலிருந்து 2025 மே 16ஆம் தேதி 24 பேருந்துகளும், 2025 மே 17ஆம் தேதி 100 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிக்க தங்களது பயணித்திற்கு https://www.tnstc.in/OTRSOnline/ என்ற இணையதளம் மூலமும் TNSTC ஆப் மூலமும் முன்பதிவு செய்ய வேண்டும் என போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.