சென்னை டூ நெல்லை.. இன்று முதல் 23 புதிய அதிநவீன பேருந்துகள்.. டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

TNSTC AC Buses From Chennai: 2025 மே 24ஆம் தேதி முதல் 23 புதிய அதிநவீன குளிர்சாதப் பேருந்துகளுக்கு இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருச்செந்தூர், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, பெங்களூரு என பல்வேறு இடங்களுக்கு அதிநவீன ஏசி பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னை டூ நெல்லை.. இன்று முதல் 23 புதிய அதிநவீன பேருந்துகள்.. டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

பேருந்துகள்

Updated On: 

24 May 2025 11:27 AM

சென்னை, மே 24 : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு 2025 மே 24ஆம் தேதி முதல் 23 புதிய அதிநவீன குளிர்சாதப் பேருந்துகளுக்கு இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் போக்குவரத்து சேவை மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு  மாவட்டங்களும், அண்டை மாநிலங்களும் பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.  போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது.  இந்த நிலையில், தற்போது 23 அதிநவீன பேருந்து சேவையை போக்குவரத்து கழகம் இயக்கி உள்ளது. 2025 மே 24ஆம் தேதி முதல்  பல்வேறு மாவட்டங்களில் அதிநவீன ஏசி பேருந்து சேவையை போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது. இது பயணிகள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இன்று முதல் 23 புதிய ஏசி பேருந்துகள்


அதன்படி, திருச்சி – திருப்பூதிக்கு 2 ஏசி பேருந்துகளும், சென்னை கிளாம்பாக்கம் – பெங்களூருவுக்கு 4 ஏசி பேருந்துகளும், சென்னை கோயம்பேடு – பெங்களூருவுக்கு 2 பேருந்துகளும், சென்னை திருவான்மியூர் – திருச்செந்தூர், மன்னார்குடி – சென்னை, காரைக்குடி – சென்னை, ஈரோடு – சென்னை, மதுரை – சென்னை, திருநெல்வேலி – சென்னை ஆகிய இடங்களுக்கு தலா இரண்டு ஏசி பேருந்துகளும், திருச்சி – சென்னைக்கு ஒரு ஏசி பேருந்துகளும் 2025 மே 24ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

இந்த வழித்தடங்களுக்கு  வேறுவேறு டிக்கெட் கட்டணங்கள் இருக்கும்.  உதாரணமாக,  சென்னை – திருச்செந்தூர் படுக்கை வசதி கொண்ட ஏசி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் ரூ.600 முதல் ரூ.800 வரை இருக்கும்.  எனவே, ஒவ்வொரு ஊர்களின் தூரத்திற்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் TNSTC செயலி அல்லது https://www.tnstc.in/OTRSOnline/  என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு ஏற்ப குளிர்சாதன வசதி உள்ளது.

ஒவ்வொரு படுக்கையிலும் சார்ஜிங் பாயிண்ட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இதற்கிடையில், மின்சார பேருந்துகளுக்கு இயக்கவும் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மாநகர மின்சார பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் முதற்கட்டமாக சென்னையில் 30க்கும் மேற்பட்ட மின்சார மாநகர பேருந்துகள் 2025 ஜூன் மாதம் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை தொடர்ந்து, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மாநகர மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.