வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Weather Update : வங்கக்கடல் பகுதிகளில் 2025 மே 27ஆம் தேதியான இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மேலும், தமிழகத்தில் 4 நாட்களுக்கு நீலகிரி, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் அலர்ட்!

மழை

Updated On: 

27 May 2025 07:50 AM

சென்னை, மே 27 : மத்திய மேற்கு அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் 2025 மே 27ஆம் தேதியான இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு கனமழை (tamil nadu weather update) வெளுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு பகுதிகளில் மழை தீவரமாக பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. எப்போது ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் பருவமழை, 2025ஆம் ஆண்டு மே 24ஆம் தேதியே தொடங்கியது. இதனால், கேரளா, மும்பை, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

அதன்படி,  மத்திய மேற்கு அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் 2025 மே 27ஆம் தேதியான இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 2025 மே 27ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 2025 மே 27, 28ஆம் தேதிகளில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 மே 29, 30ஆம் தேதிகளில் கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில்  மழை நிலவரம் என்ன?


சென்னையை பொறுத்தவரை, 2025 மே 27ஆம் தேதியான இன்று நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், 2025 மே 27ஆம் தேதி மே 30ஆம் தேதி வரை மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இதற்கிடையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்று கூறுப்பட்டுள்ளது.