Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெயிலுக்கு ரெஸ்ட்.. இன்று வெளுக்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், 2025 மே 6ஆம் தேதியான இன்று கனமழை வெளுக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயிலுக்கு ரெஸ்ட்.. இன்று வெளுக்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?
மழைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Published: 06 May 2025 06:20 AM

சென்னை, மே 06 : தமிழகத்தில் 2025 மே 6ஆம் தேதியான இன்று கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் (Tamil Nadu Weather Alert) தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் லேசான முதல மிதமான மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்  கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. 2025  மார்ச்  மாதம் முதலே கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர சிரமப்படுகின்றன. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்  வெப்பநிலை 100 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது.

கொட்டப்போகும் கனமழை

அதோடு, வெப்ப அலையும் வீசுகிறது.  மேலும்,  2025 மே 4ஆம் தேதி கத்திரி வெயில் துவங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் அதிகமாக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.   இதற்கிடையில், அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களில் மழையும் பெய்து வருகிறது.

கொங்கு, டெல்டா, தென் மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில், தமிழகத்தில் 2025 மே 6ஆம் தேதியான இன்று கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி,  தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.  இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 மே 6ஆம் தேதியான இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தள்ளது.

எந்தெந்த மாவட்டங்கள்?

அதோடு, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 மே 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, 2025 மே 6ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு, சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2025 மே 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

உற்பத்தித்துறை ஸ்டார்ட்அப்களுக்கு அழைப்பு! யார் விண்ணப்பிக்கலாம்?
உற்பத்தித்துறை ஸ்டார்ட்அப்களுக்கு அழைப்பு! யார் விண்ணப்பிக்கலாம்?...
2வது மாடியில் இருந்து உருண்டு விழுந்து இளைஞர் பலி!
2வது மாடியில் இருந்து உருண்டு விழுந்து இளைஞர் பலி!...
முடி உதிர்வு பிரச்னைக்கு தீர்வு சொல்லும் பதஞ்சலி
முடி உதிர்வு பிரச்னைக்கு தீர்வு சொல்லும் பதஞ்சலி...
டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரியான படங்கள் நிறைய வரவேண்டும்...
டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரியான படங்கள் நிறைய வரவேண்டும்......
வைகோவுக்கு என்னாச்சு? சென்னை மருத்துவமனையில் அனுமதி!
வைகோவுக்கு என்னாச்சு? சென்னை மருத்துவமனையில் அனுமதி!...
கோவில் தேரோட்டத்தில் மோதல் – பலர் படுகாயம், வீடுகளுக்கு தீவைப்பு
கோவில் தேரோட்டத்தில் மோதல் – பலர் படுகாயம், வீடுகளுக்கு தீவைப்பு...
"உங்களுக்கு முழு ஆதரவு” பிரதமர் மோடியிடம் உறுதியளித்த ரஷ்யா!
மரணமாஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? - வெளியானது மாஸ் அப்டேட்
மரணமாஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? - வெளியானது மாஸ் அப்டேட்...
விடிந்தால் கல்யாணம்... மணப்பெண் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!
விடிந்தால் கல்யாணம்... மணப்பெண் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!...
லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு... கோரிக்கை இதுதான்..!
லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு... கோரிக்கை இதுதான்..!...
கொட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்
கொட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்...