Tamil Nadu News Live: அதிமுக ஆட்சியில் திருப்பூர் புறக்கணிப்பு – முதல்வர் ஸ்டாலின்!

Tamil Nadu Breaking News Today 11 August 2025, Live Updates: அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 2 நாட்கள் பயணமாக திருப்பூர், கோவை மாவட்டத்திற்கு சென்றுள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Tamil Nadu News Live: அதிமுக ஆட்சியில் திருப்பூர் புறக்கணிப்பு - முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு டாப் நியூஸ்

Updated On: 

11 Aug 2025 11:15 AM

LIVE NEWS & UPDATES

  • 11 Aug 2025 11:12 AM (IST)

    Tomato Price Hike: சென்னையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு!

    சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மொத்த விற்பனையில் தக்காளி கிலோ ரூ.60ம், சில்லறை விற்பனை கிலோ ரூ.80 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ச்சியான விலை உயர்வால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

  • 11 Aug 2025 10:58 AM (IST)

    மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவர் கீழே விழுந்து பலி

    சென்னை கோடம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சக்திமான கீழே விழுந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 11 Aug 2025 10:42 AM (IST)

    CM MK Stalin: மக்கள் தீர்ப்பை திருடுவதற்கான சதி அம்பலம் – முதல்வர் ஸ்டாலின்!

    தேர்தல் ஆணையத்தை தனது மோசடி இயந்திரமாக பாஜக பயன்படுத்தி விட்டதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி அவர் மக்கள் தீர்ப்பை திருடுவதற்கான சதி அம்பலமாகியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

  • 11 Aug 2025 10:26 AM (IST)

    Coimbatore: ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானைகள்

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அறிவொளி நகர் அருகே செயல்பட்டு வந்த ரேஷன் கடையை காட்டு யானைகள் சூறையாடியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ரேஷன் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த அரிசி மற்றும் பருப்பு மூட்டைகளை இழுத்து சேதப்படுத்தியது. இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுக்கரை வனத்துறையினர் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர்.

  • 11 Aug 2025 10:10 AM (IST)

    பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு

    இந்த மீனவர்கள் போராட்டம் மூலம் மறைமுகமாகவும், நேரடியாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு வேலை இழப்பு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

    Read more

  • 11 Aug 2025 09:52 AM (IST)

    இராமேஸ்வரம் மீனவர்கள் கைது

    இலங்கை கடற்படையினரால் 8 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து, 700க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கரையில் நங்கூரமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

  • 11 Aug 2025 09:37 AM (IST)

    மக்களிடையே உரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்

    திருப்பூரில் பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிதாக அமைக்க இருக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனைத் தொடர்ந்து அங்க இருக்கக்கூடிய பொது மக்களிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்

    Read More

  • 11 Aug 2025 09:25 AM (IST)

    பொள்ளாச்சியில் முதல்வர் ஸ்டாலின் பிளான்

    திருப்பூரில் அரசு நிகழ்ச்சி முடித்துக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடுமலையில் இருந்து கார் மூலம் பொள்ளாச்சிக்கு செல்கிறார். அங்கு காமராஜர், சுப்பிரமணியன் மற்றும் மகாலிங்கம் ஆகிய தலைவர்களின் திருவுருவ சிலையை திறந்து வைக்கிறார்.

  • 11 Aug 2025 09:10 AM (IST)

    MK Stalin : திருப்பூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    சென்னையில் இருந்து நேற்று கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின். இன்று திருப்பூர் செல்கிறார். அங்கு பல நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கவுள்ளார். பல்வேறு துறைகள் சார்பில் 19 ஆயிரத்து 785 பேருக்கு ரூபாய் 295 கோடி 29 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது

  • 11 Aug 2025 08:56 AM (IST)

    ஆன்லைன் சூதாட்டம் – கும்பகோணம் வாலிபர் விபரீத முடிவு

    கும்பகோணத்தில் சுரேஷ்குமார் என்ற ஐடி ஊழியர் ஒருவர் , ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50,000 இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    விரிவாக படிக்க

  • 11 Aug 2025 08:44 AM (IST)

    எடப்பாடி பழனிசாமியின் நாளைய திட்டம்

    நாளை அதாவது ஆகஸ்ட் 12 2025 தேதியான நாளை ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். அங்கு ஓசூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் பர்கூர் சட்டசபை தொகுதிக்கு பிரசாரம் செய்ய செல்கிறார்.

    விரிவாக படிக்க

  • 11 Aug 2025 08:28 AM (IST)

    இன்று கிருஷ்ணகிரி சுற்றுப்பயணம்

    ஆகஸ்ட் 11 2025 தேதியான இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செல்கிறார் ஈபிஎஸ்.  மதியம் 2 மணி அளவில் சேலத்தில் இருக்கக்கூடிய அவரது வீட்டிலிருந்து கிருஷ்ணகிரிக்கு சாலை வழியாக பயணம். கிருஷ்ணகிரியைத் தொடர்ந்து இரவு 7.30 மணி அளவில் ஓசூரில் பல்வேறு பகுதிகளில் அவர் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்.

  • 11 Aug 2025 08:18 AM (IST)

    Edappadi K. Palaniswami : ஈபிஎஸ் சுற்றுப்பயணம் இன்று

    அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.  அதன்படி தனது 3 ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கவுள்ளார்

  • 11 Aug 2025 08:05 AM (IST)

    PMK Issue : நான் சொல்வது தான் நடக்கும் – ராமதாஸ்

    இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், முக்கியமாக கூட்டணி குறித்து யார் சொல்வதையும் கேட்காதீர்கள் நான் சொல்வது தான் நடக்கும்.2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன் என்றார்

    விரிவாக படிக்க

  • 11 Aug 2025 07:48 AM (IST)

    Ramadoss Meeting : 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு  உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் அன்புமணி கலந்துகொள்ளவில்லை

  • 11 Aug 2025 07:35 AM (IST)

    Chennai Rains : சென்னையில் பரவலாக மழை

    சென்னை வானிலை நிலவரத்தை பொறுத்தவரை, நேற்று மாலை முதல்  நல்ல மழைப்பதிவு இருந்தது. மடிப்பாக்கம், வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, சின்னமலை, அடையாறு, பட்டினப்பாக்கம், தாம்பரம், ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது

    Read More

  • 11 Aug 2025 07:23 AM (IST)

    கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக உசிலம்பட்டி (மதுரை) 9 செ.மீ மழை பதிவானது.

    பேரையூர் (மதுரை) 8, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 7, கரூர் (கரூர்), லக்கூர் (கடலூர்), கீரனூர் (புதுக்கோட்டை), குப்பணம்பட்டி (மதுரை) தலா 5, மேலாலத்தூர் (வேலூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), வாடிப்பட்டி (மதுரை), எழுமலை (மதுரை), கிருஷ்ணராயபுரம் (கரூர்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), ராசிபுரம் (நாமக்கல்) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

  • 11 Aug 2025 07:12 AM (IST)

    Tamil Nadu Rains : மிதமான மழை பெய்ய வாய்ப்பு

    ஆகஸ்ட் 11 2025 தேதி ஆன இன்று தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதேபோல் ஆகஸ்ட் 16 2025 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

  • 11 Aug 2025 07:04 AM (IST)

    Tamil Nadu Weather Today : டெல்டாவில் இரவு முதல் மழை

    தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது

Breaking News in Tamil Today 11 August 2025, Live Updates: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) உடுமலை மற்றும் பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆகஸ்ட் 11, 2025 அன்று சென்னையில் இருந்து கோவை செல்கிறார். இரண்டு நாட்கள் அந்த பகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவர், நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவிருக்கிறார். இதுகுறித்து இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம். தமிழக எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) ஆகஸ்ட் 11, 2025 முதல் கிருஷ்ணகிரியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தனது 3 ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். அதுகுறித்த அப்டேட்டுகளை உடனுக்குடன் இந்த பகுதியில் பார்க்கலாம். பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அதுகுறித்து தகவல்களை இந்த பகுதியில் பார்க்கலாம். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கணைகள் உள்ளிட்டோருக்கு முதல்வர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 11, 2025 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்

தமிழ்நாடு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கிளிக் செய்க