Tamil Nadu News Live Updates: தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி!
Tamil Nadu Breaking news Today 28 July 2025, Live Updates: எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதற்கட்ட சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அவர், இன்று இரண்டாம் கட்ட பயணத்தை தொடங்கியுள்ளார்.

தமிழ்நாடு செய்திகள்
LIVE NEWS & UPDATES
-
சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனுவை தள்ளுபடி செய்ய கோரிக்கை
சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாறி சாட்சியம் சொல்வதற்கு பாதிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவல் நிலைய விசாரணையில் இருவரும் அலறி துடித்தபோது அதனை ஸ்ரீதர் கேட்டு ரசித்தார் என சாட்சியம் உள்ளதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ஐடியில் பணியாற்றும் இளைஞர் கொலை.. நீதி கேட்டு போராட்டம்
திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்ட ஐடியில் பணியாற்றும் இளைஞர் நவீனின் உறவினர்கள் நீதி கேட்டு தூத்துக்குடி – திருநெல்வேலி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குற்றவாளியின் தாய், தந்தையான காவல் ஆய்வாளர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
-
Edappadi Palanisamy: மக்கள் தரும் ஆதரவுக்கு நன்றி – எடப்பாடி பழனிசாமி
சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ளதை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இப்படியான நிலையில் எழிச்சிமிகு பயணத்துக்கு மக்கள் தரும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
-
திமுக அரசின் மகத்தான கொள்கை மணல் கொள்ளை: அன்புமணி ராமதாஸ்
காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் திமுகவின் மகத்தான கொள்கை மணல் கொள்ளை எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
செவிலியர்களுக்கு உறுதுணையாக திராவிட மாடல் அரசு இருக்கும் – உதயநிதி ஸ்டாலின்
திராவிட மாடல் அரசு எப்போதும் செவிலியர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
-
தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி மரணம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விநாயக் – கண்மணி தம்பதியினரின் 8 மாத பெண் குழந்தை மரணமடைந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
போதைப் பொருட்கள் பறிமுதல்.. 7 மாணவர்கள் உட்பட 11 பேர் கைது
தாம்பரம் பகுதியை அடுத்துள்ள பொத்தேரி, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர்களின் இடங்களில் நடைபெற்ற சோதனையில் போதை சாக்லெட்டுகள், பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் 7 மாணவர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
நெல்லையில் நடைபெற்ற ஆணவக்கொலை.. பதற்றத்தில் மாநகரம்
நெல்லை கேடிசி நகர் அருகே சகோதரியை காதலித்ததால் நவீன் என்ற இளைஞரை அப்பெண்ணின் தம்பி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மாற்று சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த கொலை நடந்ததாகவும், இதுதொடர்பாக சுர்ஜித் என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காவல் உதவி மையத்தில் சிறுநீர் கழித்த நபருக்கு விழுந்த பளார்
சென்னை பூக்கடை பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் காவல் உதவி மையத்தில் சிறுநீர் கழித்த நபரை அங்கிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செம்பகராமன் கண்டித்து, கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறிது நேரத்தில் வழக்கறிஞர் ஒருவரை அழைத்து வந்த அடி வாங்கிய நபர், காவல் உதவி ஆய்வாளர் செண்பகராமனிடம் தகராறில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
என்னை குறி வைக்கின்றனர்.. ராஜேந்திர பாலாஜி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார முகமாக இருப்பதால் என்னை குறி வைக்கின்றனர் என திமுக மீது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மதுரையில் கொளுத்தும் வெயில்..
கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் அதிகபட்சமாக மதுரையில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும் படிக்க
-
கோவை, நீலகிரியில் பரவலாக மழை..
தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்து சில நாட்களாக மழை பதிவு இருந்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் சின்னகல்லாரு, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய பகுதிகளில் தலா நான்கு சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.
-
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்..
மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து பட்டுப் புடவை அணிவிக்கப்பட்டு சுமார் 2.10 லட்சம் கண்ணாடி வளையல்கள் கொண்டு உற்சவர் ஆன அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது பின்னர் பல்வேறு வகையான வண்ண மலர்கள் கொண்டு அர்ச்சனை நடைபெற்றது. மேலும் படிக்க
-
2 லட்சம் வளையல்களால் அலங்காரம்.. பக்தி பரவசத்தில் மக்கள்..
ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் 2 லட்சம் வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
-
இயல்பை விட அதிக மழை இருக்கும்.. வானிலை ஆய்வாளர்கள் தகவல்..
தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே கோவை நீலகிரி தென்காசி கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. ஜூலை மாதம் தொடங்கியது முதல் தற்போது வரை பெரும்பாலான நாட்கள் வறண்ட வானிலையே நிலவியதன் காரணமாக மழையின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமாக மழை பதிவு இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
-
காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்..
மேட்டூர் அணையிலிருந்து கடந்த சில நாட்களாக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் குருவைப் பயிர்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளது. நீர்நிலைகளும் நிரம்பியதால் பாசனத்திற்கு தண்ணீரும் தேவை குறைந்துவிட்ட நிலையில், அணையிலிர்ந்து தினமும் திறந்து விடப்படும் நீரில் பெரும்பாலான நீர் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை ஓரளவாவது தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்
-
ஆடிப்பூரம் திருவிழா.. நெல்லையப்பர் கோயிலில் திரண்ட பக்தர்கள்..
ஆடிப்பூரம் என்பது ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரம் ஆகும் இது ஆண்டாளுக்கு மிகவும் விசேஷமான நாளாகும் அந்த வகையில் நெல்லையில் இருக்கக்கூடிய நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவானது கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது அதேபோல் ஜூலை 21 2025 அன்று காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த நிலையில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு அந்த கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு ஆயிரம் கணக்கான வளையல்கள் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது இதனை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு உள்ளனர்.
-
அதிகரிக்கும் போதைப்பொருள் பழக்கம்.. இரண்டு பேர் கைது
போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது பொத்தேரி அடுத்த ஒரு தனியார் குடியிருப்பில் போதை மாத்திரைகள், பாங்கு அதே போல் கஞ்சா அடிக்க பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு இருந்த இரண்டு பேரை கைது செய்து மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க
-
சென்னையில் போலீசார் அதிரடி சோதனை.. சிக்கிய போதை பொருட்கள்..
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையிலான சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென அங்கு உள்ள விடுதிகள் அதேபோல் சிறு கடைகள் டீக்கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மப்டியில் சோதனைகள் ஈடுபட்டனர். அதில் பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்பட்டதால் பரபரப்பு…
சென்னையில் இருந்து புறப்பட தயாராக இண்டிகோ விமானத்தில் அவசர கால கதவு திறப்பதற்கான பட்டனை அழுத்திய மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது. கவன குறைவால் தெரியாமல் அழுத்திவிட்டதாக கூறிய அவரது பயணத்தை ரத்து செய்து விமானத்திலிருந்து அவரை கீழே இறக்கி விட்டனர். வழக்கு பதிவு செய்து பயணியிடம் தொடர்ந்து சென்னை விமான நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க..
-
சென்னை: விமானம் புறப்படும் போது ஒலித்த எமர்ஜென்சி அலாரம்..
சென்னையில் இருந்து துர்காபூருக்கு 164 பேருடன் (158 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள்) இண்டிகோ விமானம் புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அப்போது, பயணிகள் கிளம்ப தயாராக இருந்த நிலையில், கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. விமானம் புறப்படுவதற்காக டாக்ஸியில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் அவசர அலாரம் ஒலித்தது. இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பௌ ஏற்பட்டது.
-
வெகுவிமரிசையாக நடைபெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம்
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு வெகுவிமரிசையாக நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
-
இண்டிகோ விமானத்தில் அவசரகால பட்டனை அழுத்திய கல்லூரி மாணவர்
சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் அவசரகால பட்டனை அழுத்திய கல்லூரி மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கவனக்குறைவால் தெரியாமல் செய்ததாக சொன்னதால் அவரை எச்சரித்து விமான பயணத்தை ரத்து செய்து கீழே இறக்கி விட்டனர்.
-
ஆடிப்பூரத்தை முன்னிட்டு 2 லட்சம் வளையல்களை கொண்டு அலங்காரம்
ஆடிப்பூரத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் 2 லட்சம் வளையல்களை கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களிலும் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
-
நலம் காக்கும் திட்டத்தின் கீழ் முழு உடல் பரிசோதனை செய்யலாம்!
2025, ஆகஸ்ட் 2ல் தொடங்கவுள்ள தமிழ்நாடு அரசின் நலம் காக்கும் திட்டத்தின் கீழ் முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். இந்த திட்டத்தை சாந்தோமில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் படிக்க
-
நகை வாங்குவது போல நடித்து ஒரு கிலோ வெள்ளி கொள்ளை.. 4 பெண்கள் கைது
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் நகை வாங்குவது போல நடித்து ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கலைவாணி, ஜெயமாலா, தாரணி, ஷோபனா ஆகிய 4 பேரை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
ஓடும் ரயிலில் கத்தியைக் காட்டி மிரட்டி 12 சவரன் நகைகள் பறிப்பு
அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் இருந்து பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 12 சவரன் நகைகளை பறித்துச் சென்ற நபரை இரயில்வே போலீசார் தேடி வருகின்றனர். ரயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பிடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
-
கல்லூரி மாணவர்களிடம் இருந்து கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே செயல்படும் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் அறைகளில் தாம்பரம் துணை ஆணையர் பவன்குமார் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 5200 கஞ்சா சாக்லேட்டுகள், குட்கா, பான் மசாலா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
-
Vaiko: பிரச்னைகளை தீர்க்காமல் அரசியல் நாடகம்.. சாடிய வைகோ!
இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்ததை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகளை தீர்க்காமல் அரசியல் நாடகம் நடத்துவதாகவும், பிரதமர் வருகைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என கூறியுள்ளார். மேலும் படிக்க
-
வீடு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின்.. வெளியான முக்கிய அப்டேட்
உடல்நலக்குறைவால் ஒருவாரம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இப்படியான நிலையில் அவர் 3 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அலுவல் பணிகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
Rain News Live: சென்னை நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை நகரின் ஒரு சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மழைப்பொழிவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
Local Holiday: செங்கல்பட்டு, விருதுநகருக்கு இன்று உள்ளூர் விடுமுறை
ஆடி மாதத்தில் வரும் மிக முக்கிய பண்டிகையான ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மற்றும் விருதுநகர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெறும்ம் விழாவை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
மதுவிலக்குக்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்: கே.வி.தங்கபாலு
காமராஜருக்கு எதிராக யார் பேசினாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காங்கிரஸின் கொள்கை பூரண மதுவிலக்கு, அதற்காக நாங்கள் போராடுவோம் என தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வார காலம் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (ஜூலை 27) வீடு திரும்பினார். அவருக்கு திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓரிரு நாளில் அவர் தனது அலுவல் பணிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மக்களின் உரிமைகளை மீட்க நடைபயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நான்காவது நாளாக இன்று மக்களை சந்திக்க உள்ளார். ஓட்டுக்காக உங்களை சந்திக்கவில்லை என்றும், உங்கள் உரிமைகளை மீட்க வந்தேன் என்றும் அவர் தனது பரப்புரையின் போது தெரிவித்தார். தமிழகத்தில் ஆடி மாதத்தின் மிக முக்கிய ஆன்மீக நிகழ்வாக கருதப்படும் ஆடிப்பூரம் திருவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதனால் அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து அம்மன் கோயில்களிலும் வெகு விமரிசையாக ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா நடைபெறுகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆடி திருவாதிரை முன்னிட்டு நேற்று (ஜூலை 27) அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு பேசிய அவர், தமிழ்நாட்டில் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள