தமிழக அரசின் தூய்மை மிஷன் – யோகி பாபுவின் விழிப்புணர்வு வீடியோ இதோ
தமிழ்நாடு அரசின் தூய்மை மிஷன் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் கழிவுகளை தரம் பிரித்து அவற்றை மறுசுழற்சிக்கும் மறு பயன்பாட்டுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக யோகி பாபு நடித்த விழிப்புணர்வு வீடியோ வெளியாகியுள்ளது.

யோகி பாபு
சென்னை, செப்டம்பர் 26: தமிழ்நாடு அரசு சார்பில் 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ள தூய்மை மிஷன்”மாநிலம் முழுவதும் கழிவுகளை சீரான முறையில் பராமரிக்கும் ஒரு புதிய முயற்சியாக திகழ்கிறது. இந்த மிஷனின் நோக்கம் குப்பைகளில் இருந்து கழிவுகளைபிரித்து, அவற்றை மீண்டும் பயன்படுத்தல், மறுசுழற்சி செய்வது, மற்றும் சாலையோரங்களில் கழிவு கொட்டுதலை குறைப்பது. இதன் மூலம் சுத்தமான, பசுமையான தமிழ்நாடு எனும் இலக்கை எட்டுவது முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளதுஅ. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இந்த தூய்மை மிஷன் மாநில அளவில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் தலைமையிலான மாநில நிர்வாகக் குழு கொள்கை மற்றும் திட்டங்களை வழிநடத்துகிறது. அதே போல மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட தூய்மை குழுக்களை வழிநடத்துகின்றனர். தொகுதி மற்றும் நகராட்சிகளில் நேரடி செயல்பாடுகளை தூய்மை குழுக்கள் மேற்கொள்கின்றன. கிளீன் தமிழ்நாடு கம்பெனி லிமிட்டெட் நிறுவனம் இந்த திட்டத்தின் மூளையாக செயல்படுகிறது.
யோகி பாபுவின் விழிப்புணர்வு வீடியோ
திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
-
அரசு அலுவலகங்களில் தேவையற்ற பழைய பொருட்கள், மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகள், பயன்படுத்தாத புத்தகங்கள் போன்றவற்றை சேகரித்து, உரிமம் பெற்ற மறுசுழற்சி செய்யும் வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.
-
இப்படி கழிவு சேகரிப்பு நேரடியாக கண்காணிக்கப்பட்டு, எந்த அளவு கழிவு சேகரிக்கப்பட்டது. அதன் மதிப்பு என்ன என்பது பதிவு செய்யப்படுகிறது.
-
அரசு அலுவலகங்களுக்கு அடுத்ததாக கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பின்னர் கிராமம், நகரம் என மக்கள் பங்கேற்கும் அளவிற்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. கழிவுகளை பிரிப்பதை பழக்கமாக மாற்றுவது இதன் நோக்கம் என கூறப்படுகிறது.
விழிப்புணர்வு பிரச்சாரம்
இந்த திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக பிரபல நடிகர் யோகி பாபு தலைமையில் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் குழந்தையிடம் பேசுவது போல உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு 30 விநாடிகள் ரீஸ்ஸ் உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர வேண்டும். சிறந்த ரீலஸ்களுக்கு ரூ.25,000 பரிசு வழங்க வேண்டும்.
கடந்த 2025 ஜூன் 5ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடந்த முதன்முறையாக 1,000க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் பங்கேற்றன. இதில் பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகள், உலோகம், பழைய காகிதங்கள், கண்ணாடி, பழைய மொபைல் ஆகியவை முறையாக சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டது.
இரண்டு சேகரிப்பு இயக்கங்கள் இதுவரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு அரசு கழிவு மேலாண்மை முறைமைக்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.