ஊட்டியில் 127வது மலர் கண்காட்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

Ooty 127th Flower Exhibition | தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி. கோடை காலத்தில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் அங்கு பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அந்த வகையில் இன்று ( மே 15, 2025) முதல் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.

ஊட்டியில் 127வது மலர் கண்காட்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

15 May 2025 07:22 AM

ஊட்டி, மே 15 : ஊட்டியில் இன்று (மே 15, 2025) தொடங்க உள்ள மலர் கண்காட்சியை (Flower Exhibition) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) திறந்து வைக்க உள்ளார். மிகவும் புகழ்பெற்ற இந்த மலர் கண்காட்சிக்காக அங்கு பல சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோடை காலத்தில் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என்பதால் அங்கு பல வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மலர் கண்காண்ட்சிக்கும்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஊட்டியில் நடைபெற உள்ள இந்த 127வது மலர் கண்காட்சியில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊட்டியில் தொடங்கவுள்ள 127வது மலர் கண்காட்சி

நீலகிரி மாவட்டம், ஊட்டி தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது. இதனால் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக கோடை காலத்தின் போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இந்த நிலையில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக தோட்டக்கலத்துறை பல்வேறு சிறப்பு கண்காட்சிகளை நடத்தும். இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டிக்கு படை எடுக்கும் சுற்றுலா பயணிகளின் கண்களை குளிர்விக்கும் விதமாக மலர் கண்காட்சி, பழ கண்காட்சி உள்ளிட்டவற்றை நடத்தும். பல ஆண்டுகளாக இது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று ( மே 15, 2025) 127வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

மிக பிரம்மாண்டமாக கண்ணை கவரும் வகையில் உருவாகியுள்ள இந்த மலர் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். வழக்கமாக 5 நாட்கள் மட்டும் நடைபெறும் இந்த மலர் கண்காட்சி, இந்த ஆண்டு ( 2025) 12 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் சுமார் 2 லட்சம் மலர்களை கொண்டு யானை, சிங்கம், படகு உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மலர் கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவட்தால் பாதுகாப்பு கருதி அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.