10, 11ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது? ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?
Tamil Nadu SSLC, HSC 11th Exam Result : தமிழகத்தில் 10,11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள வெளியானதை தொடர்ந்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கு 2025 மே 19ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே, இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை பார்ப்போம்.

மாணவர்கள்
சென்னை, மே 17 : தமிழகத்தில் 10,11ஆம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 2025 மே 19ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதியான நேற்று வெளியானது. 10ஆம் வகுப்பு தேர்வு 2025 மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 8.71 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் 8,17,262 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 10ஆம் வகுப்பு தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளை அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10, 11ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
அதன்படி, மாணவிகள் 4,11,183 பேரும், மாணவர்கள் 4,000,078 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிட்டதட்ட மாணவர்களை விட 4.14 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு தேர்வில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதே நேரத்தில், 11ஆம் வகுப்பு தேர்சில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய 8,09,098 மாணவர்களில் 7,43,232 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 6.43 சதவிதம் மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, 10, 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழுக்கு மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதன்படி, மேல்நிலை கல்வியில் சேர 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஆகியவை 2025 மே 19ஆம் தேதி திங்கள்கிழமை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?
மாணவர்கள் என்ற இணைதயத்திற்கு சென்று notification என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை க்ளிக் செய்து, மாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீட வேண்டும். அதன்பின் உங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தோன்றும். இதனை download என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் :
10,11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் தேவைப்பட்டால் 2025 மே 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பள்ள மாணவர்கள் தங்கள் பயின்று பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தாங்கள் எழுதிய தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த பிறகே, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.