ஆம்னி பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து… பறிபோன 4 உயிர்கள்.. கரூரில் பயங்கரம்!

Karur Omni Bus Accident : கரூர் செம்மடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்தும், வேனும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆம்னி பேருந்து அதிவேகமாக வந்ததை இந்த விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆம்னி பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து... பறிபோன 4 உயிர்கள்.. கரூரில் பயங்கரம்!

கரூர் பேருந்து விபத்து

Updated On: 

17 May 2025 08:42 AM

கரூர், மே 17 : கரூர் செம்மடை அருகே ஆம்னி பேருந்தும், சுற்றுலா வேனும் நேருக்கும் மோதி விபத்துக்குள்ளானது (karur Omni Bus Accident). இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். செம்மடை அருகே அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து, சாலையின் சென்டர் மீடியனை தாண்டியதில், எதிர் திசையில் வந்த சுற்றுலா வேனில் மோதியது. அதோடு, அவ்வழியாக வந்த டிராக்டர் டிப்பர் மீதும் பேருந்து மோதி, எதிர்திசையில் பாய்ந்தது. இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுமி, ஓட்டுனர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பேருந்தும் ஒன்று கரூர் மாவட்டம் செம்மடை அருகே நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது.

ஆம்னி பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து

அப்போது, இதற்கு எதிர்திசையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சுற்றுலா வேன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து தனது கட்டுப்பாட்டை மீறி சாலையின் சென்டர் மீடியணை தாண்டி சென்றுள்ளது. அப்போது, எதிர் திசையில் வந்த சுற்றுலா வேனும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி உள்ளது.

மேலும், ஆம்னி பேருந்து அவ்வழியாக வந்த டிராக்டர் டிப்பர் மீது மோதியது. இதில் டிராக்டரும் தலைகீழாக கவிழ்ந்தது. அதிகாலையிலையே நடந்த கோர விபத்தில், 4 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். மேலும், 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்ததும் உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

4 பேர் உயிரிழப்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மற்றும் போலீசாரும் இடிபாடுகளில் சிக்கி பயணிகளை மீட்டனர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கிட்டதட்ட 15க்கும் மேற்பட்டோருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், 4 பேர் உயிரிழந்துள்ளனர். 8 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆம்னி பேருந்து அதிகவேமாக சென்றதே இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.