சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு குட் பை..! விரைவில் தீ நகர் மேம்பாலம் திறப்பு
Chennai Flyover Opens: சென்னை அசோக் நகர், கே.கே. நகர், சைதாப்பேட்டை பகுதிகளில் இருந்து தீ.நகர் செல்லும் பயணிகள் நீண்ட நாட்களாக போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், மேட்லி சந்திப்பிலிருந்து சிஐடி நகர் வரை புதிய மேம்பாலம் 2025 மே மாத இறுதிக்குள் திறக்கப்பட உள்ளது. 1.1 கி.மீ நீளமுள்ள இந்த மேம்பாலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மே 13: சென்னை அசோக் நகர், கே.கே. நகர் மற்றும் சைதாப்பேட்டை பகுதிகளில் இருந்து தீ.நகர், பனகல் பார்க் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேட்லி சந்திப்பிலிருந்து சிஐடி நகர்-உஸ்மான் சாலை வரை புதிய மேம்பாலம் 2025 மே மாத இறுதிக்குள் திறக்கப்பட உள்ளது. 1.1 கி.மீ நீளத்தில் இரண்டு வழியில் அமைக்கப்பட்ட இந்த பாலம் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும். ரங்கநாதன் தெரு, தீ.நகர் பேருந்து நிலையம் அருகே இறங்குதளங்கள் உள்ளன. பழைய, புதிய மேம்பாலங்கள் காரிடர் வழியாக இணைக்கப்பட உள்ளன. பொதுமக்கள் நிம்மதியாக பயணம் செய்ய இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசோக் நகர், கே.கே. நகர் மக்களுக்கு நிம்மதி
சென்னை அசோக் நகர், கே.கே. நகர் மற்றும் சைதாப்பேட்டை பகுதிகளிலிருந்து பனகல் பார்க் மற்றும் தீ.நகர் பகுதிக்கு செல்லும் மக்கள், போக்குவரத்து நெரிசல் காரணமாக நீண்ட நாட்களாக சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், மேட்லி சந்திப்பில் இருந்து சிஐடி நகர்-உஸ்மான் சாலை வரை புதிய இணைப்புப் பாலம் மே மாத இறுதிக்குள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்தப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேம்பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள்
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமாரகுருபரன் கூறியதாவது, “மேம்பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன. இதனை விரைவில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் திறக்க உள்ளோம்” என்றார்.
பயண நேரம் குறையும் – சீரான போக்குவரத்து
இந்த மேம்பாலம் மேட்லி சந்திப்பிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் தொடங்கி, 1.1 கி.மீ. நீளத்தில் இரண்டு வழிகளில் செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. கார்கள், பைக்குகள் மற்றும் பேருந்துகள் எளிதில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம், தீ.நகர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இறங்கும் தளத்தையும் கொண்டுள்ளது. மேலும், ரங்கநாதன் தெரு அருகிலும் மேலும் ஒரு இறங்கும் தளம் கட்டப்பட்டுள்ளது.
பழைய மற்றும் புதிய மேம்பாலங்கள் இணைப்பு வேலை
புதிய மற்றும் பழைய சிஐடி நகர்-உஸ்மான் சாலை மேம்பாலங்களை இணைக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இவை நேரடி மேம்பால இணைப்பு அல்ல. வாகனங்கள் கீழே இறங்கி, சிறிய காரிடர் வழியாக பழைய மேம்பாலத்தை சேர்ந்த பாதைக்கு இணைக்கப்படும்.
சாக்கடை வேலைகளால் ஏற்பட்ட சிரமம் குறையும்
தற்போது தீ.நகர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பாதையில் பாதாள சாக்கடை வேலைகள் நடைபெறுவதால், ஒரு வழி மூடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களுக்கு சிரமமும் ஏற்பட்டு வருகிறது. புதிய மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் இந்த சிரமம் குறையும்.
புதிய பாலம் – தீ.நகருக்கு வரப்பிரசாதம்
மாநகராட்சியின் துரைசாமி சுரங்கப்பாதையை புதுப்பிக்க வேண்டும் என்பதும், அதன் மோசமான நிலை வாகன ஓட்டிகளை பாதிக்கிறது என்பதும் மக்களால் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த புதிய மேம்பாலம் திறக்கப்பட்டால், அசோக் நகர், கே.கே. நகர், சைதாப்பேட்டை பகுதிகளில் இருந்து தீ.நகருக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எளிதாக சென்று வரலாம். இது பயண நேரத்தையும் குறைக்கும். மேம்பாலத்தின் திறப்பால் தீ.நகர் பகுதியின் போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.