நீட் முடிவுகள் வெளியீட்டுக்கு தற்காலிகமாக தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Chennai HC Stays NEET Results:சென்னை உயர்நீதிமன்றம், ஆவடியில் நடந்த நீட் தேர்வில் மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனுவை ஏற்று, தேர்வு முடிவுகளை வெளியிட தற்காலிக தடை விதித்துள்ளது. 2025 மே 5 அன்று நடந்த தேர்வில், 3 மணி முதல் 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டதால், 13 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை ஜூன் 2க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீட் முடிவுகள் வெளியீட்டுக்கு தற்காலிகமாக தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் முடிவுகள் வெளியீட்டுக்கு தற்காலிகமாக தடை

Published: 

17 May 2025 18:13 PM

சென்னை மே 17: மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனுவுக்கு இணங்க, NEET தேர்வு முடிவுகளை வெளியிட தற்காலிக தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) உத்தரவிட்டுள்ளது. 2025 மே 5ஆம் தேதி ஆவடியில் உள்ள தேர்வு மையத்தில் 464 மாணவர்கள் NEET தேர்வு எழுதியுள்ளனர். கனமழையால் 3 மணி முதல் 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டதாகவும், குறைந்த வெளிச்சம், இடமாற்றம் மற்றும் கவனச்சிதறலால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என 13 மாணவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் மறுத் தேர்வு நடத்தக் கோரி மனு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு பதிலளிக்க நேரம் கோர, நீதிபதி லட்சுமி நாராயணன் (Justice Lakshmi Narayanan) அதுவரை முடிவுகளை வெளியிட தடை விதித்தார். இதையடுத்து, வழக்கின் தொடர்ந்து விசாரணை 2025 ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தை நாடினர்

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 13 மாணவர்கள், 2025 மே 5ஆம் தேதி ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வு மையத்தில் NEET தேர்வை எழுதியுள்ளனர். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு துவங்கிய நிலையில், 2.45 மணிக்கு கனமழையுடன் ஏற்பட்ட மின் தடையால் 3 மணி முதல் 4.15 மணி வரை தேர்வு செயல்முறை பாதிக்கப்பட்டதாக மாணவர்கள் புகாரளித்துள்ளனர். மேலும், மழைநீர் மையத்தில் புகுந்ததால், இடம் மாற்றப்பட்டு தேர்வு எழுதச் சொல்லப்பட்டதாலும், குறைந்த வெளிச்சம் மற்றும் கவனச்சிதறலால் முழுமையாக தேர்வு எழுத இயலவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மறுத்தேர்வு கோரிக்கையுடன், முடிவுகள் வெளியீட்டுக்கு தடை கோரிக்கை

மாணவர்கள் மனுவில், குறைபாடுகள் குறித்து தேசிய தேர்வு முகமைக்கு புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவம் போன்ற கனவுத் துறைக்கான நுழைவுத் தேர்வில் இவ்வாறு ஏற்படும் பிரச்சனைகள் மாணவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கக்கூடும் என்பதால், மறுதேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், வழக்கு முடிவடையும் வரை NEET முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

நீதிமன்றம் விசாரணை எடுத்து தடை உத்தரவு

இந்த வழக்கு, நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி, மின் தடையால் பாதிப்பு ஏற்பட்டதா என்பதை உறுதி செய்ய நேரம் கோரினார். இதை ஏற்று, மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தேசிய தேர்வு முகமை ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை NEET தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து, வழக்கின் தொடர்ந்து விசாரணை 2025 ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.