சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்.. எந்தெந்த ரூட்ல தெரியுமா?
Chennai MTC Bus Route Numer Changed : சென்னையில் 7 வழித்தடங்களில் மாநகர பேருந்துகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளது. புதிய வழித்தட எண்களின்படியே, 2025 மே 1ஆம் தேதியான இன்று முதல் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகர பேருந்துகள்
சென்னை, மே 01: சென்னை மாநகர பேருந்துகளில் வழித்தட எண்களை மாற்றப்பட்டுள்ளது. பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், மாநகர போக்குவரத்து கழகம் 7 வழித்தட எண்களை மாற்றியுள்ளது. இந்த 7 பேருந்துகளில் அதே வழித்தடத்தில் 2025 மே 1ஆம் தேதியான இன்று முதல் மாற்றப்பட்ட எண்கள் மூலம் இயக்கப்படுகிறது. சென்னையில் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது மாநகர பேருந்துகள். புறநகர் வரைக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்
ரயில், மெட்ரோவை காட்டிலும், அனைத்து இடங்களுக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்களுக்கான மகளிர் விடியல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மாநகர பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், மாநகர பேருந்துகளை நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும், கூடுதல் பேருந்து சேவையை வழங்கவும் தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் தாழ்தள பேருந்துகளை அறிமுகப்படுத்தியது. விரைவில் மினி பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.
அதோடு, பேருந்துகளில் கேமரா, டிஜிட்டல் முறையில் டிக்கெட் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிலையில் தான், மாநகர பேருந்துகளின் வழித்தட எண்களை மாநகர போக்குவரத்து கழகம் மாற்றியுள்ளது. சென்னையில் 7 மாநகர பேருந்துகளின் வழித்தட எண்கள் மாற்றப்பட்டு, அதன்படி, 2025 மே 1ஆம் தேதியான இன்று முதல் இயக்கப்படுகிறது.
எந்தெந்த ரூட்ல தெரியுமா?
மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்து தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, அதில் 07 வழித்தட எண்களை மாறுதல் செய்து, அதே வழித்தடத்தில் 01.05.2025 முதல் இயக்கப்பட உள்ளது.
– மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல்.#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus |… pic.twitter.com/rjkwrTFgtD— MTC Chennai (@MtcChennai) April 30, 2025
அதன்படி, மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 170A மாதவரம் – தாம்பரம், 170T கவியரசு கண்ணதாசன் நகர் – தாம்பரம், 11M அய்யப்பன்தாங்கல் – பிராட்வே, 18A பிராட்வே – கிளாம்பாக்கம், 91 திருவான்மியூர் – கிளாம்பாக்கம், 66PX பூந்தமல்லி – கூடுவாஞ்சேரி, 170TX கவியரசு கண்ணதாசன் நகர் – கிளாம்பாக்கம் ஆகிய 7 பேருந்துகளின் வழித்தட எண்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்கள் படியே, இன்று முதல் பேருந்து அவ்வழித்தடங்களில் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அண்மையில் தான், விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் கழித்து ஈசிஆர், கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்து சேவையை மாநகர பேருந்து கழகம் தொடங்கியுள்ளது. இதற்கு பயணிகள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். எனவே, வரும் நாட்களில் பேருந்து சேவை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.