AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தொடர் கனமழை.. நெல்லை, தென்காசி, குமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..

School Leave: தொடர் கனமழை காரணமாக, அக்டோபர் 22ஆம் தேதியான இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22ஆம் தேதியான இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை.. நெல்லை, தென்காசி, குமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 22 Oct 2026 07:05 AM IST

அக்டோபர் 22, 2026: தொடர் கனமழை காரணமாக, அக்டோபர் 22ஆம் தேதியான இன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாக வடகடலோர தமிழகப் பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகியிருந்தது. இந்தச் சூழலில், வரக்கூடிய நாட்களில் தென் தமிழகத்தில் நல்ல மழைப்பதிவு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

அக்டோபர் 22ஆம் தேதியான இன்று, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “எதற்கெடுத்தாலும் ‘தேசவிரோதி’ முத்திரை குத்துவதா?”.. மத்திய அரசின் போக்கை கடுமையாக சாடிய அண்ணாமலை!!

தொடர் கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாகத் தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரையில், தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகக் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் தொடரும் மழை – வானிலை ரிப்போர்ட்..

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை

சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், வடகடலோரத் தமிழகம், தென் தமிழகம், உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அடுத்த சில நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மன்னார் வளைகுடா மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகக்கூடிய சூழல் நிலவுவதால், மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஏற்கெனவே ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Follow Us