சுட்டெரிக்கும் சூரியன்.. 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை..

Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலை அதிகபட்ச வெப்பநிலை என்பது இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

சுட்டெரிக்கும் சூரியன்.. 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை..

கோப்பு புகைப்படம்

Published: 

11 Jul 2025 07:05 AM

வானிலை நிலவரம், ஜூலை 11, 2025: தமிழகத்தில் கடந்து சில நாட்களாக வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகிறது. கோடை காலம் முடிவுக்கு வந்தாலும் வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமல் இருப்பது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனை தொடர்ந்து வேலூரில் 38.5 டிகிரி செல்சியஸும், திருத்தணியில் 38 டிகிரி செல்சியஸும், தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸும், திருச்சிராப்பள்ளியில் 38.3 டிகிரி செல்சியஸும், நாகையில் 38.5 டிகிரி செல்சியஸும், ஈரோட்டில் 38.6 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. ஜூலை 10 2025 தேதி ஆன நேற்று மட்டும் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடிக்கும்:

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. 2025 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவம் மழையானது முன்கூட்டியே மே மாதம் தொடங்கியது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2025 மே மாதம் மற்றும் ஜூன் மாத தொடக்கத்தில் நல்ல மழை பதிவான நிலையில் அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

Also Read: மீனவர்களின் படகுகளில் “தமிழக வெற்றிக் கழகம்” என எழுதியதற்காக மானியம் மறுப்பு? – விஜய் கண்டனம்

இது ஒரு பக்கம் இருக்க மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணம் வரும் ஜூலை 16 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை:

அதிகபட்ச வெப்பநிலை பொருத்தவரையில் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாகக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை பொறுத்த வரையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை என்பது 39 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.3 டிகிரி செல்சியஸும் நுங்கம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Also Read: பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.. மதிமுக கூட்டத்தில் நடந்த சம்பவம்.. துரை வைகோ வருத்தம்!

பிரதீப் ஜான் சொல்வது என்ன?


மேலும் கடல் காற்று நகரை நோக்கி உள்ளே வரும் காரணத்தால் தேவையான ஈரப்பதம் கிடைப்பதாகவும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் மழை இருக்கக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே மழை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்