AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெயிலில் இருந்து பிரேக்.. சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் எப்படி ?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பதிவாகி வருகிறது.

வெயிலில் இருந்து பிரேக்.. சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் எப்படி ?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Jun 2026 06:25 AM IST

ஜூன் 9, 2026: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பதிவாகி வந்தாலும், வெயிலின் தாக்கமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில், சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 39.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 39.3, தொண்டியில் 39, திருத்தணியில் 39, தஞ்சாவூரில் 38.4, நாகையில் 38.9 மற்றும் கடலூரில் 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வரக்கூடிய நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும், ஒரு சில மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக வெப்ப அசௌகரியம் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பொம்மை, பொம்மை, பொம்மை பார்! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார் – நயினார் நாகேந்திரன் சாடல்..

இதற்கிடையில், தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் கடுமையாக இருந்து வந்த நிலையில், இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை இருக்கும்?

அதே சமயம், நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஜூன் 10ஆம் தேதி நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், ஜூன் 11ஆம் தேதி நீலகிரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களிலும் கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us