Caste Census India: சாதிவாரியான கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Tamil Nadu CM MK Stalin Celebrates: மத்திய அரசு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி எண்ணிக்கையைச் சேர்க்க முடிவு செய்துள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களது கூட்டணியின் வெற்றியாகக் கருதுகிறார். இதுகுறித்து ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நீண்டகால போராட்டத்திற்குப் பின்னர் இந்த வெற்றி கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும், முடியும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Caste Census India: சாதிவாரியான கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published: 

30 Apr 2025 21:07 PM

சென்னை, ஏப்ரல் 30: இந்தியாவில் கடந்த 1951ம் ஆண்டு முதல் ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், கடந்த 2021ம் ஆண்டில் கொரோனா (Corona) தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் (Census) புதிய தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு 2026ல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சுழற்சி மாறும் என்று கூறப்படுகிறது. அதன்படி, அடுத்த மக்கள் தொகை 2025-2035, 2035-2045 என நடத்தப்படலாம்.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சரவை முடிவுகள் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி எண்ணிக்கை சேர்க்கப்பட வேண்டும் என்று அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார். இந்தநிலையில், சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்திய கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் பதிவு:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவின் முக்கிய கருத்துகள்:

  • மிகவும் அவசியமான சாதி கணக்கெடுப்பிற்கு முதலில் மறுப்பு தெரிவித்து, அதை தாமதப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொண்டு அது தோல்வியடைந்த பின்னர், மத்திய பாஜக அரசு, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து இது நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
  • இருப்பினும், மத்திய பாஜக அரசு இது தொடர்பான முக்கிய கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லி. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? அது எப்போது முடிவடையும்?
  • ஒரு காலத்தில் எதிர்க்கட்சிகள் சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பதாக குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இப்போது அவர் மீண்டும் மீண்டும் அவதூறு செய்த கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார்.
  • உண்மையான சமூக நீதியைப் பின்தொடர்வதற்கு சாதி கணக்கெடுப்பு அவசியம். இது யாருடைய விருப்பத்திற்குரியது அல்ல. அநீதியை முதலில் அதன் அளவை அங்கீகரிக்காமல் சரிசெய்ய முடியாது.
  • தமிழ்நாடு அரசுக்கும் திமுகவிற்கும், இது கடினமாக பெற்ற வெற்றி. சாதி வாரியான கணக்கெடுப்பு கோரி சட்டமன்றத்தில் முதலில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள் நாங்கள்.
  • ஒவ்வொரு கூட்டத்திலும் இந்த சாதி வாரியான கணக்கெடுப்பை நாங்கள் ஆதரித்தோம். பிரதமருடனான ஒவ்வொரு சந்திப்பிலும், பல கடிதங்கள் மூலமாகவும் இந்தக் கோரிக்கையை நாங்கள் மீண்டும் வலியுறுத்தி, மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
  • மாநில அளவிலான சாதி கணக்கெடுப்புகளுக்கு மற்றவர்கள் அழைப்பு விடுத்தாலும், நாங்கள் உறுதியாக இருந்தோம். மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு மட்டுமே சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட சாதி கணக்கெடுப்பை வழங்க முடியும், வழங்க வேண்டும். எங்கள் நிலைப்பாடு இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • திராவிட மாடலின் கொள்கைகளால் இயக்கப்படும் எங்கள் கடினமான சமூக நீதிப் பயணத்தில் திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு வெற்றி.