Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கிறது.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Edappadi Palaniswami Statement on All Party Meeting | தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்த நிலையில், அது தொடர்பாக ஏப்ரல் 9, 2025 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், கூட்டத்தை புறக்கணிக்க போவதாக ஈபிஎஸ் அறிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கிறது.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
எடப்படி பழனிசாமி
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 08 Apr 2025 21:06 PM

சென்னை, ஏப்ரல் 08 : நீட் (NEET – National Entrance Eligibility Test) விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டதாகவும், இது தொடர்பாக ஏப்ரல் 09, 2025 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், நீட் விலக்கு தொடர்பாக நாளை (ஏப்ரல் 09, 2025) நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK – Anaithindhiya Anna Dravida Munnetra Kazhagam) பங்கேற்காது என்று அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அனைத்துக் கட்சி கூட்டத்தை அறிவித்தை முதலமைச்சர்

தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த மசோதா, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா செப்டம்பர் 18, 2021 அன்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்காமல் இருந்த ஆளுநர் 5 மாதங்களுக்கு பிறகு இந்த சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார். ஆளுநரின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், பிப்ரவரி 02, 2022 அன்று மீண்டும் இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் இந்த மசோதா ஆளுநரால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காக நிலுவையில் வைக்கப்படு இடிருந்தது. இந்த மசோதா குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய உயர் கல்வித்துறை, மத்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கோரிய அனைத்து கேள்விகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்திருந்தது. இவை எல்லாவற்றையும் செய்து முடித்து இருந்தாலும் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்து இருந்தது.

அனைத்துக் கட்சி கூட்டத்தை அறிவித்த முதலமைச்சர்

இந்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதலை மறுத்துள்ளது என்று கூறினார். அது தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களிடமும் ஒரு கலந்தாலோசனை கூட்டம் ஏப்ரல் 09, 2025 அன்று மாலை தலைமை செயலகத்தில் நடத்தப்பட உள்ளது என்று அறிவித்தார். முதலமைச்சர் அறிவித்தப்படி, நாளை (ஏப்ரல் 09, 2025) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் மக்களை சந்திக்க வேண்டிய நிலையில், நான்கு ஆண்டுகள் ஆகியும் நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால் திமுக மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தலிப்பையும், எதிர்ப்பையும் சரி செய்வதற்காக நாளை (ஏப்ரல் 09, 2025) சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ளார். இந்த கூட்டத்தில் எந்தவி தீர்வும் ஏற்படபோவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அழைத்துள்ள அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon Great Summer Sale 2025 : இயர்பட்ஸ் வாங்கபோறீங்களா?
Amazon Great Summer Sale 2025 : இயர்பட்ஸ் வாங்கபோறீங்களா?...
மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதல்வர் பெருமிதம்!
மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதல்வர் பெருமிதம்!...
மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா
மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா...
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்ப அலை !
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்ப அலை !...
பணி அழுத்தம்... - முதுகு தண்டை பாதிக்கும் காரணங்கள்!
பணி அழுத்தம்... - முதுகு தண்டை பாதிக்கும் காரணங்கள்!...
2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கம்பீர் பதில்
2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கம்பீர் பதில்...
திருமணத்தில் ரூ.21 கோடி பரிசாக வழங்கிய மணமகள் வீட்டார்!
திருமணத்தில் ரூ.21 கோடி பரிசாக வழங்கிய மணமகள் வீட்டார்!...
பேடிஎம் Q4 2025 வருவாய்: ரூ.81 கோடி லாபம்.. வெளியான விவரம்!
பேடிஎம் Q4 2025 வருவாய்: ரூ.81 கோடி லாபம்.. வெளியான விவரம்!...
ஓசூர் கோயில் பிரசாதத்தில் பாம்பு.. பக்தர்கள் அதிர்ச்சி..!
ஓசூர் கோயில் பிரசாதத்தில் பாம்பு.. பக்தர்கள் அதிர்ச்சி..!...
பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட்.. சூர்யாவின் 'ரெட்ரோ' வசூல் எவ்வளவு?
பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட்.. சூர்யாவின் 'ரெட்ரோ' வசூல் எவ்வளவு?...
SIP : 20 ஆண்டுகளுக்கு ரூ.5,000 - 10 ஆண்டுகளுக்கு ரூ.10,000?
SIP : 20 ஆண்டுகளுக்கு ரூ.5,000 - 10 ஆண்டுகளுக்கு ரூ.10,000?...