RR vs PBKS: போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Punjab Kings Beat Rajasthan Royals: ஐபிஎல் 2025ன் 59வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி 209 ரன்களில் சுருண்டது. நேஹல் வதேரா (70 ரன்கள்) மற்றும் ஹர்பிரீத் ப்ரார் (3 விக்கெட்டுகள்) பஞ்சாப் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் பிளேஆஃப் தகுதிக்கு ஒரு படி நெருங்கியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் 2025ன் (IPL 2025) 59வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 18ம் தேதியான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியும் ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி (Punjab Kings), சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது, இந்த வெற்றியின் மூலம், பஞ்சாப் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றது என்றே சொல்லலாம். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு நேஹல் வதேரா 70 ரன்களும், ஹர்பிரீத் ப்ரார் 3 முக்கியமான விக்கெட்டு எடுத்து முக்கிய பங்காற்றினர்.
220 ரன்கள் இலக்கு:
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 220 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களமிறங்கி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சேர்ந்து 5வது ஓவரிலேயே அணியின் ஸ்கோரை 60 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றனர். 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இன்னிங்ஸில் 25 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 50 ரன்கள் எடுத்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதேநேரத்தில், ரியான் பராக் வெறும் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்பிரீத் பராட் பந்தில் கிளீன் பவுல்டு ஆனார். துருவ் ஜூரெல் ஒரு முனையை இறுக்கமாக பிடித்துக்கொள்ள, மறுமுனையிலிருந்து அவருக்கு ஆதரவாக யாரும் இல்லை. துருவ் ஜூரெல் மற்றும் ஷிம்ரான் ஹெட்மியர் இடையே 37 ரன்கள் பார்ட்னர்ஷிப் இருந்தது. ஹெட்மியர் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனபோது, ராஜஸ்தான் வெற்றி பெற 16 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.
கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை:
கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 30 ரன்கள் தேவையாக இருந்தது. 19வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் அந்த ஓவரில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது பஞ்சாப் அணிக்கு சாதகமாக மாறியது. கடைசி ஓவர் வீசிய மார்கோ ஜான்சன் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்த இரண்டு பந்துகளில் மார்கோ ஜான்சன், துருவ் ஜூரெல் மற்றும் வனிந்து ஹசரங்காவை ஆட்டமிழக்கச் செய்தார். கடைசி 2 பந்துகளில் 2 பவுண்டரிகள் அடித்தும் ராஜஸ்தான் அணிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.