MI vs GT: போட்டியை புரட்டி போட்ட பும்ரா, போல்ட்.. குஜராத் அணியை கதறவிட்ட மும்பை..!
IPL Match 56 Highlights: ஐபிஎல் 2025ன் 56வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 155 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் 156 ரன்கள் இலக்கை துரத்தியது. மழையால் தடைபட்ட போட்டியில், சுப்மன் கில்லின் சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு, குஜராத் அணி தோல்வியடைந்தது. டக்வொர்த்-லூயிஸ் முறையின் படி குஜராத் வெற்றி பெற வேண்டிய ரன்கள் அளவு அதிகமாக இருந்ததால், மும்பை அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 56வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 6ம் தேதி மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) கேப்டன் சுப்மன் கில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்க வீரரான ரியான் ரிக்கல்டன் 2 ரன்களிலும், அதிரடி ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு, உள்ளே வந்த வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் அரைசதம் அடிக்க, சூர்யகுமார் யாதவும் 24 பந்துகளில் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் அவுட்டான பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்னிங்ஸ் திடீரென தடுமாறியது. 97-2 என்ற நிலையில் இருந்த மும்பை அணி 20 ஓவர்களில் 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கடைசி கட்டத்தில் கார்பின் போஷ் 22 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஒரு முக்கியமான இன்னின்ஸ் விளையாடி, மும்பை இந்தியன்ஸ் அணியை 150 ரன்களுக்கு மேல் கரை சேர்த்தார்.
குஜராத் அணிக்கு 156 ரன்கள் இலக்கு:
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் வெறும் 5 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சுப்மன் கில் மறுமுனையில் அஸ்திவாரம் அமைக்க தொடங்கினார். உள்ளே வந்த ஜாஸ் பட்லரும் அதிரடியாக விளையாட முயற்சிக்க பவர் பிளே முடிவில், குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்து, அடுத்த ஓவர் வீசிய ஹர்திக் பாண்ட்யா 18 ரன்கள் கொடுக்க, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர் சுப்மன் மற்றும் பட்லர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் இரண்டாவது விக்கெட் 11.3 ஓவர்களில் 78 ரன்களில் சரிந்தது. ஜோஸ் பட்லர் 27 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வினி குமார் பெவிலியனுக்கு அனுப்பினார். அப்போது, குஜராத் வெற்றி பெற 50 பந்துகளில் 78 ரன்கள் தேவையாக இருந்தது. மழைக்கு பிறகு 15வது ஓவர் வீசிய பும்ரா சுப்மன் கில்லை 43 ரன்களில் ஆட்டமிழக்க செய்ய, அடுத்த ஓவரில் ரூதர்போர்ட்டின் விக்கெட்டையும் போல்ட் எடுத்தார். 16 ஓவர்கள் முடிவில் 118 ரன்கள் எடுத்திருந்தது குஜராத்.
24 பந்துகளில் 38 ரன்கள் தேவை என்ற நிலையில் பும்ரா வீசிய 17வது ஓவரில் ஷாரூக் கான் ஒரு பவுண்டரி அடித்து க்ளீன் போல்டானார். கடைசி 18 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் அஸ்வனி குமார் வீசிய ஓவரில் ரஷித் கான் அவுட்டானாலும், கோட்ஸி பவுண்டரி அடித்தார். 18வது ஓவர்களில் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. டக் வொர்த் லூயிஸ் 137 ரன்கள் எடுத்திருந்தால் குஜராத் அணி வெற்றி பெற்றிருக்கும்.