Watch Video: ஐபிஎல்லில் மீண்டும் ஒரு சர்ச்சை! ரிங்கு சிங்குவை பளார் விட்ட குல்தீப் யாதவ்.. என்ன நடந்தது..?

Kuldeep Yadav Slaps Rinku Singh: ஐபிஎல் 2025ன் 48வது போட்டியில், கொல்கத்தா டெல்லியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. போட்டிக்குப் பிறகு, டெல்லி கேபிடல்ஸ் வீரர் குல்தீப் யாதவ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரிங்கு சிங்கை அறைந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Watch Video: ஐபிஎல்லில் மீண்டும் ஒரு சர்ச்சை! ரிங்கு சிங்குவை பளார் விட்ட குல்தீப் யாதவ்.. என்ன நடந்தது..?

குல்தீப் யாதவ் - ரிங்கு சிங்

Published: 

30 Apr 2025 10:48 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 48வது போட்டியில் நேற்று அதாவது 2025 ஏப்ரல் 29ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை, அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. போட்டிக்கு பிறகு அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் வீரர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது, ஒரு வீடியோவில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்கை (Rinku Singh) அறைந்தார். அதன்பிறகு ரிங்கு சிங்குவின் முகம் சட்டென மாறியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.

என்ன நடந்தது..?

குல்தீப் யாதவ் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காகவும், ரிங்கு சிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் ஐபிஎல் 2025ல் விளையாடி வருகின்றனர். போட்டிக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோ, அதில் இரு அணிகளின் வீரர்களும் ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் வீரர்கள் பேசுவது போல் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர். பின்னர், குல்தீவ் யாதவிற்கு அருகில் நின்று ரிங்கு சிங் சிரித்தப்படி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று குல்தீப் யாதவும் ரிங்கு சிங்குவை அறைந்தார். அப்போது, ரிங்கு சிங்குவின் முகம் சட்டென மாறியது. அதன்பிறகு, மீண்டும் ஒருமுறை ரிங்கு சிங்குவை குல்தீப் யாதவ் அறைவதை அந்த வீடியோவில் காணலாம்.

குல்தீப் யாதவ் ரிங்கு சிங்குவை அடித்த காட்சி:

போட்டி சுருக்கம்:

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன்களும், ரிங்கு சிங் 36 ரன்களும் எடுத்திருந்தனர். 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ஃபாஃப் டு பிளெசிஸ் 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்தார். அக்‌ஷர் படேலும் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார். விபராஜ் நிகாம் இறுதிவரை போராடி 19 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இருப்பினும், 205 ரன்கள் என்ற இலக்கை தொட முடியாமல் டெல்லி கேபிடல்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

டெல்லி அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. இந்த போட்டிக்குப் பிறகு புள்ளிகள் பட்டியலில் அணிகளின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. டெல்லி கேபிடல்ஸ் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், கொல்கத்தா 9 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளன.

Related Stories
India vs England 5th Test: வெளியேறிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்..! புது கேப்டனுக்கு கீழ் களமிறங்கும் இங்கிலாந்து.. இந்திய அணிக்கு சாதகமா?
World Legends Championship 2025: WLC அரையிறுதியை புறக்கணிக்கிறதா இந்திய அணி..? பதட்டத்தில் பாகிஸ்தான்.. யாருக்கு பின்னடைவு..?
Abhishek Sharma: வெறும் 17 டி20 சர்வதேச போட்டிகள்! ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!
India – England 5th Test: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் எப்போது..? அணியில் இவ்வளவு மாற்றமா..?
India – England 5th Test: ஓவல் பிட்ச் விவகாரம்! மைதான பராமரிப்பாளரிடம் மோதலில் ஈடுபட்ட கம்பீர்.. என்ன நடந்தது?
India’s Kennington Oval Record: ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை எப்படி? கடைசியாக எப்போது வென்றது?