Kohli, Rohit’s Future: 2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா..? கம்பீர் சுவாரஸ்ய பதில்..!

Gautam Gambhir Interview: இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சுவாரஸ்யமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் அவர்கள் இடம் பெறுவது அவர்களது திறமையைப் பொறுத்தது என்றும், வயது ஒரு தடையல்ல என்றும் அவர் கூறியுள்ளார். அணித் தேர்வு தேர்வுக்குழுவின் பொறுப்பு என்றும், பயிற்சியாளரின் பங்கு அணியை தயார்படுத்துவது மட்டுமே என்றும் கம்பீர் வலியுறுத்தினார்.

Kohli, Rohits Future: 2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா..? கம்பீர் சுவாரஸ்ய பதில்..!

கம்பீருடன் கோலி மற்றும் ரோஹித்

Published: 

06 May 2025 20:28 PM

இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) தூண்களாக தற்போது விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இருந்து வருகின்றனர். இந்த இருவரின் சிறப்பான பங்களிப்பு காரணமாக 2024ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு, ரோஹித் சர்மா (Rohit Sharma), விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து, இந்தாண்டு அதாவது 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இவர்களின் பங்களிப்பு காரணமாக இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தநிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி (Virat Kohli) 2027ல் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையிலும் விளையாட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம், ரோஹித் மற்றும் கோலியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கம்பீர் சுவாரஸ்யமான பதிலை ஒன்றை அளித்தார்.

ரோஹித், கோலி எதிர்காலம்:

ஏபிபியின் சிறப்பு நிகழ்ச்சியான இந்தியா@2047 உச்சி மாநாட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஐபிஎல் முடிந்தபிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான சுற்றுபயணத்தில் விளையாடுவார்களா என்று கேள்வியை இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “ விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறுவது எனது கையில் இல்லை. ஏனென்றால், அணி தேர்வு என்பது தேர்வுக்குழுவால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒரு பயிற்சியாளராக எனது வேலை அணியிலிருந்து சிறந்து விளையாடும் 11 பேரை தயார் செய்வது மட்டுமே.

பயிற்சியாளர்கள் மட்டுமே அணியை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது முற்றிலும் தவறானது. இந்த கருத்து ஒழிக்கப்பட வேண்டும். எனக்கு முன் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் யாரும் அணியை தேர்வு செய்யவில்லை. நானும் அவ்வாறு செய்யப்போவதும் இல்லை. இந்த கேள்விக்கு தேர்வாளர்கள் என்னை விட சிறப்பாக பதிலப்பார்கள்” என்று தெரிவித்தார்.

2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை ஓய்வு பெறாமல் இருப்பார்களா..?

இதற்கு பதிலளித்த கவுதம் கம்பீர், “ரோஹித் மற்றும் கோலி தங்களால் சிறந்ததை இந்திய அணிக்கு கொடுக்க முடிந்தால், இருவரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள். நீங்கள் எப்போது உங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறீர்கள், எப்போது முடிக்கிறீர்கள் என்பது உங்கள் தனிப்பட்ட முடிவு. உங்கள் வாழ்க்கை எப்போது முடிவடையும் என்று எந்த பிசிசிஐ, பயிற்சியாளர் அல்லது தேர்வாளரும் உங்களுக்குச் சொல்ல முடியாது. யாரும் உங்களை தடை செய்யவும் முடியாது. நீங்கள் நல்ல உடற்தகுதியுடன் இருந்தால், 40 மற்றும் 45 வயது வரை கூட விளையாடலாம்” என்று தெரிவித்தார்.