PAN : வீட்டில் இருந்தே புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ! | TV9 Tamil News

PAN : வீட்டில் இருந்தே புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

Published: 

17 Feb 2026 16:29 PM

 IST

Apply PAN Card From Home | இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று தான் பான் கார்டு. பான் கார்டு இல்லை என்றால் பல வேலைகளை செய்ய முடியாது. இந்த நிலையில், வீட்டில் இருந்தபடியே பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5இந்திய குடிமக்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய சில ஆவணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்றுதான் பான் கார்டு. பான் கார்டு இல்லை என்றால் பண பரிவர்த்தனை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போய்விடும். இந்த நிலையில், வீட்டில் இருந்தே புதிய பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

இந்திய குடிமக்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய சில ஆவணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்றுதான் பான் கார்டு. பான் கார்டு இல்லை என்றால் பண பரிவர்த்தனை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போய்விடும். இந்த நிலையில், வீட்டில் இருந்தே புதிய பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 / 5

அதற்கு முதலில் www.proteantech.in/services/pan என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் Tax Modernization என்பதை கிளிக் செய்து, பான் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு எந்த வகை பான் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பம் செய்கிறீர்கள் என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.

3 / 5

அதாவது, இந்திய குடிமகன் என்றால் அதற்கு படிவம் 49 ஏ என்பதை கிளிக் செய்து, பின்னர் தனிநபராக விண்ணப்பம் செய்கிறீர்களா அல்லது நிறுவனமாக விண்ணப்பம் செய்கிறீர்களா என்பதை தேர்வு செய்ய வேண்டும். தனிநபர் என்றால் Individual என்ற அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும். 

4 / 5

பிறகு உங்களது பெயரை ஆதார் அட்டையில் இருப்பதை போலவே பதிவிட வேண்டும். அதனை தொடர்ந்து, உங்களுடைய பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய அனைத்தையும் உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும். பிறகு புகைப்படம், முகவரி, பிறந்த தேதிக்கான அடையாள ஆவணங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

5 / 5

அனைத்தையும் முடித்த பிறகு விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்தி, விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்யும் பட்சத்தில் அடுத்த 15 நாட்களில் உங்கள் முகவரிக்கு புதிய பான் கார்டு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.