2026 மத்திய பட்ஜெட்.. எங்கு, எப்படி பார்ப்பது?.. முழு விவரம் இதோ! | TV9 Tamil News

2026 மத்திய பட்ஜெட்.. எங்கு, எப்படி பார்ப்பது?.. முழு விவரம் இதோ!

Updated On: 

31 Jan 2026 17:49 PM

 IST

Union Budget 2026 Live | 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 01, 2026 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பட்ஜெட் நேரலையை எங்கு, எப்படி பார்ப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 52026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28, 2026 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாக 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதாவது நாளை (பிப்ரவரி 01, 2026) இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28, 2026 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாக 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதாவது நாளை (பிப்ரவரி 01, 2026) இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

2 / 5

2026 ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்களுக்கு பலன் அளிக்க கூடிய அறிவிப்புகள் வெளியாகுமா, தொழில்துறை, தொழில்நுட்பம் என அனைத்து துறைகளும் இந்த பட்ஜெட்டுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், 2026 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை எப்படி பார்ப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

3 / 5

பட்ஜெட் நேரலையை நீங்கள் தொலைக்காட்சி அல்லது ஸ்மார்ட்போன் மூலமே பார்க்க முடியும். அரசின் தொலைக்காட்சிகளான சன்சத், டிடி நியூஸ் ஆகிய சேனல்களில் பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். எனவே டிவி அல்லது ஸ்மார்ட்போன்களில் இந்த சேனல்களில் நீங்கள் பட்ஜெட் நேரலையை பார்க்கலாம்.

4 / 5

பட்ஜெட் நேரலையை இணையதளம் வாயிலாக பார்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்கு அரசின் அதிகாரப்பூர்வ பட்ஜெட் இணையதளமான www.indiabudget.gov.in என்ற இணையதளம் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் பட்ஜெட் நேரலையை பார்க்க முடியும்.

5 / 5

இதுதவிர யூடியூப் சேனல்களிலும் உங்களால் பட்ஜெட் நேரலையை முழுவதுமாக பார்க்க முடியும். உதாரணமாக சன்சத் டிவி, தூர்தர்சன் மற்றும் பிஐபி ஆகிய அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களில் பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பிப்ரவரி 01, 2026 காலை 11 மணி அளவில் பட்ஜெட் தாக்கல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.