Vijay Sethupathi: சினிமாவில் ஏ.ஐ சிறந்த ஐடியாவை கொடுக்கிறது.. ஆனால் – விஜய் சேதுபதி பகிர்ந்து சுவாரஸ்ய விஷயம்! | TV9 Tamil News

Vijay Sethupathi: சினிமாவில் ஏ.ஐ சிறந்த ஐடியாவை கொடுக்கிறது.. ஆனால் – விஜய் சேதுபதி பகிர்ந்து சுவாரஸ்ய விஷயம்!

Updated On: 

16 Mar 2026 19:41 PM

 IST

VIjay Sethupathi About AI Role in Cinema: தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் வரிசையில் ஒருவராக முன்னேறிவருபவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் சினிமாவில் ஏ.ஐ பயன்பாடுகள், அதனால் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கும் யோசனைகளை குறித்து தெரிவித்துள்ளார்.

1 / 6நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஆரம்பகாலகட்டத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார். அந்த வகையில் தற்போது லீட் கதாநாயகனாகவே படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த அளவிற்கு சினிமாவில் இவரின் முன்னேற்றம் இருக்கிறது என்று கூறலாம்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஆரம்பகாலகட்டத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார். அந்த வகையில் தற்போது லீட் கதாநாயகனாகவே படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த அளவிற்கு சினிமாவில் இவரின் முன்னேற்றம் இருக்கிறது என்று கூறலாம்.

2 / 6

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போதுவரை மொத்தம் 50-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு பான் இந்திய மக்கள் வரை பிரபலம் இருக்கிறது.

3 / 6

திரைப்படங்களில் கதாநாயகனாக, வில்லனாக நடித்துவந்த விஜய் சேதுபதி தற்போது வெப் தொடர்களின் நடிக்கவும் ஆர்வம் காட்டிவருகிறார். இவரின் நடிப்பிலும், இயக்குநர் எம் மணிகண்டன் இயக்கத்திலும் தயாராகியுள்ள வெப் சீரிஸ்தான் முத்து என்கிற காட்டான். இதில் விஜய் சேதுபதி லீட் கதாநாயகனாக நடித்துள்ளார்.

4 / 6

இந்த வெப் தொடர்நது வரும் 2026 மார்ச் 27ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் இதன் தொடர்பான ப்ரோமோஷன் நிகழ்கிகளில் விஜய் சேதுபதி கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நேரக்கனல் ஒன்றில் பேசிய விஜய் சேதுபத்தில், சினிமாவில் ஏ.ஐ பயன்பாடு மற்றும் அதன் நோக்கங்கள் தெரிவித்துள்ளார்.

5 / 6

அதில் விஜய் சேதுபதி பேசுகையில், தற்போதுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் எல்லாருமே குடுத்துவெச்சவங்க. அவர்களுக்கு தேவையான பல ஐடியாக்களை ஏ.ஐ கொடுக்கிறது. ஏ.ஐ வெறும் ஐடியாதான் கொடுக்கும், அதை நாம் தான் தேர்வு செய்யவேண்டும். தேர்வு செய்யும் உங்களுக்கு அந்த கலையை பற்றி தெளிவாக தெரிந்திருக்கவேண்டும் என கூறினார்.

6 / 6

மேலும் பேசிய அவர், நீங்கள் ஒன்று கொடுத்தால் ஏ.ஐ ஒன்று தரும். அது சரியா?, தவறா? என நமக்கு தான் தெரியும். ஏ.ஐ பயன்படுத்தி நீங்கள் வெற்றிகண்டால் நீங்க அதிஷ்டசாலிதான். அது உங்களின் அதிஷ்டம் காரணமாக இருக்காளா?, ஆனால் அது எல்லா நேரங்களிலும் நடக்காது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us