மத்திய பட்ஜெட்: தமிழ்நாட்டுக்கு தேவையான அறிவிப்புகள் இவைதான்! | TV9 Tamil News

மத்திய பட்ஜெட்: தமிழ்நாட்டுக்கு தேவையான அறிவிப்புகள் இவைதான்!

Published: 

01 Feb 2026 13:35 PM

 IST

Union budget 2026: நாடு முழுவதும் 7 நகரங்களில் புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதில், குறிப்பாக ஐதராபாத் முதல் சென்னை, சென்னை முதல் பெங்களூருவுக்கு அதிவேக ரயில் வழித்தடம் உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

1 / 62026- 2027 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்திற்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில், தமிழகத்திற்கு சில திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

2026- 2027 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்திற்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில், தமிழகத்திற்கு சில திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

2 / 6

தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், ஒடிசாவில் மினரல் காரிடார் அமைக்கப்படும். அதாவது, கனிமவள ஆய்வு மையம் அமைக்கப்படும். அரியவகை கனிமங்களை எடுக்க இந்த மையம் அமைக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் அரிய வகை கனிம வள காரிடர்களை அமைத்து, கனிம வளங்களை வெட்டி எடுக்கவும், அதனை மேம்படுத்தவும் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.

3 / 6

நாடு முழுவதும் 7 நகரங்களில் புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதில், குறிப்பாக ஐதராபாத் முதல் சென்னை, சென்னை முதல் பெங்களூருவுக்கு அதிவேக ரயில் வழித்தடம் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 / 6

ஆதிச்சநல்லூர் கலாச்சார மையம்: இந்தியாவில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் தலங்களான ஆதிச்சநல்லூர் உள்பட 60 இடங்கள் கலாசார மையம் அமைத்து பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

5 / 6

பொதிகை மலையேற்ற சுற்றுலா: இந்தியாவில் மலையேற்ற சுற்றுலாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையில் மலையேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

6 / 6

பறவைகளை காணும் சுற்றுலா திட்டம்: தமிழ்நாட்டின் பழவேற்காட்டு ஏரியில் உலகத்தரத்தில் பறவைகளை காண்பதற்கான பிரத்யேக காட்சி மையம் அமைக்கப்படும். அந்தவகையில், அங்கு பறவகைளை கண்காணிக்க 3 கோபுரங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Follow Us
Related Stories
தேர்தல் நடத்தை விதிகள்: வாட்ஸ்அப் குழுக்களுக்கு கட்டுப்பாடு – மீறினால் சட்ட நடவடிக்கை
R. Sakkarapani Tamil Nadu Election: தோல்வியை கண்டிராத தொடர் வெற்றியாளர் சக்கரபாணி… ஒட்டன்சத்திரம் தொகுதியில் 7- ஆவது முறை வெற்றியை பதிவு செய்வாரா!
Nagercoil Constituency Election 2026: 15 ஆண்டுகள் பின் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்ற பாஜக.. இம்முறையும் நாகர்கோவில் தொகுதியில் வெற்றி கிடைக்குமா?
Kayadu Lohar: எனக்கு அந்த நடிகருடன் இணைந்து நடிக்கணும்-னு ஆசை.. ஆனால் – கயாடு லோஹர் சொன்ன விஷயம்!
சக்தி வாய்ந்த பங்குனி அமாவாசை.. அபூர்வமான நாளை கட்டாயம் தவறவிடாதீர்..
Agri S. S. Krishnamurthy Tamil Nadu Election: அதிமுகவில் “வேளாண்” புனைப்பெயருக்கு சொந்தக்காரர்… எம்எல்ஏ பதவியை தக்கவைத்துக் கொள்வாரா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி!