Sreeleela: அதனால் பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.. இப்போது அதை சமாளிக்க கற்றுக்கொண்டேன் – ஸ்ரீலீலா! | TV9 Tamil News

Sreeleela: அதனால் பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.. இப்போது அதை சமாளிக்க கற்றுக்கொண்டேன் – ஸ்ரீலீலா!

Updated On: 

22 Mar 2026 16:57 PM

 IST

Sreeleela About Negative Criticism: தென்னிந்திய சினிமாவில் டான்சிங் குயின் என அனைவராலும் அழைக்கப்பட்டுவருபவர் நடிகை ஸ்ரீலீலா. இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் தயாராகிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தன்னை பற்றி வரும் நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

1 / 6சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நடிகையாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் ஸ்ரீலீலா. இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட படங்கள் உருவாகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் உஸ்தாத் பகத் சிங். இதில் பவன் கல்யாணுக்கு அவர் ஜோடியாக நடித்திருந்தார்.

சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நடிகையாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் ஸ்ரீலீலா. இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட படங்கள் உருவாகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் உஸ்தாத் பகத் சிங். இதில் பவன் கல்யாணுக்கு அவர் ஜோடியாக நடித்திருந்தார்.

2 / 6

நடிகை ஸ்ரீலீலா தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அந்த வகையில் தமிழில் இவருக்கு அறிமுக படமாக அமைந்ததுதான் பராசக்தி. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த நிலையில், கடந்த 2026ம் ஜனவரி 10ம் தேதியில் வெளியானது.

3 / 6

இப்படமானது ஸ்ரீலீலாவிற்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. விமர்சனங்கள் ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தது என்று கூறலாம். இதையடுத்து தற்போது தமிழில் தனுஷின் நடிப்பில் உருவாகிவரும் டி55 படத்தில் முக்கிய நடிகையாக நடித்துவருகிறார். தொடர்ந்து தனது கைவசத்தில் பல படங்களை வைத்துள்ளார்.

4 / 6

தற்போது தமிழில் நடிப்பதற்கு இவர் ஆர்வம் காட்டிவரும் நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் புது படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு இணையதளங்களில் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதத்தில், விளக்கமாக பேசியுள்ளார்.

5 / 6

நடிகை ஸ்ரீலீலா அதில் பேசுகையில், நான் நடித்த படங்கள் வெளியாகும்போது, எனக்கு இணையதளங்களில் அதிக நெகடிவ் கமெண்ட்ஸ் வரும். அது எனது மனதை பாதித்திருக்கிறது. அதனால் பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். ஆனால் தற்போது எனது வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறேன் என கூறினார்.

6 / 6

மேலும் பேசிய அவர், தற்போது நான் பாராட்டையும், விமர்சனங்களையும் சமாளிப்பதற்கு கற்றுக்கொண்டேன், தேவையான விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொள்கிறேன் மேலும் தேவையற்ற விஷயங்களை மொத்தமாக புறக்கணித்துவிடுவேன் அந்த அதில் ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார்.

Follow Us