என்னிடம் அந்த விஷயத்தை மாற்றவேண்டும் நினைப்பேன் – ருக்மிணி வசந்த் பேச்சு! | TV9 Tamil News

என்னிடம் அந்த விஷயத்தை மாற்றவேண்டும் நினைப்பேன் – ருக்மிணி வசந்த் பேச்சு!

Published: 

29 Mar 2026 19:20 PM

 IST

Rukmini Vasanth : தென்னிந்திய சினிமாவில் தற்போது இளம் கதாநாயகியாக அனைவரையும் கவர்ந்துவருபவர் ருக்மிணி வசந்த். இவர் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் தன்னிடம் மாற்றவேண்டிய குணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அது என்ன என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

1 / 6கன்னட சினிமாவின் மூலம் ஒட்டுமொத்த இந்திய அளவிற்கு பிரபலமானவர் நடிகை ருக்மிணி வசந்த். இவர் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான சப்த சாகரதாச்சே எல்லோ என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தார். இப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்க இதன் 2வது பாகத்திலும் நடித்திருந்தார்.

கன்னட சினிமாவின் மூலம் ஒட்டுமொத்த இந்திய அளவிற்கு பிரபலமானவர் நடிகை ருக்மிணி வசந்த். இவர் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான சப்த சாகரதாச்சே எல்லோ என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தார். இப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்க இதன் 2வது பாகத்திலும் நடித்திருந்தார்.

2 / 6

இவ்வாறு பிரபலமான இவருக்கு தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தது என்று கூறலாம். அதில் தமிழில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது ஏஸ். 2025ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

3 / 6

இதையடுத்து சிவகார்த்திகேயனின் 23வது படமான மதராஸி படத்தில், மாலதி என்ற வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்து, அவர்களின் மனதில் இடம்பிடித்திருந்தார். இதில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்டது என்று கூறலாம். இதையடுத்து காந்தாரா 2 படத்தில் நடித்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

4 / 6

மேலும் இவர் தற்போது தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். தெலுங்கில் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகும் படத்தில் அவருக்கு ஜோடியாகவும், யாஷின் பிரம்மாண்ட படமான டாக்ஸிக் படத்தில் மெலிசா என்ற வேடத்திலும் நடித்துள்ளார். இவர் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அவரிடம் இருந்து மாற்றநினைக்கும் குணம் குறித்து தெரிவித்துள்ளார்.

5 / 6

நடிகை ருக்மிணி வசந்த் நடிகை ருக்மிணி வசந்த் பேசுகையில், சாதாரணமாகவே நான் ரொம்பவே ஓவர்திங் பண்ணுவேன். எல்லா விஷயத்திலும் ஓவர்திங் பண்ணுவேன். நா அப்படி ஓவர்திங் பண்ணி என்னையே மறந்துவிடுவேன். அதை மாற்றவேண்டும் என நினைக்கிறேன் என கூறினார். நடிகை ருக்மிணி வசந்த் பேசுகையில், சாதாரணமாகவே நான் ரொம்பவே ஓவர்திங் பண்ணுவேன். எல்லா விஷயத்திலும் ஓவர்திங் பண்ணுவேன். நா அப்படி ஓவர்திங் பண்ணி என்னையே மறந்துவிடுவேன். அதை மாற்றவேண்டும் என நினைக்கிறேன் என கூறினார்.

6 / 6

மேலும் பேசிய அவர், ஓவர்திங் பண்ணலாம், ஆனால் கொஞ்சம் பண்ணனும். ஆனால் எனக்கு கொஞ்சம் அதிகமாகவே ஆகிவிட்டது. நான் எப்போதும் நினைப்பது, உன்னை பற்றிய விஷயத்தை எளிதாக எடுத்துக்கோ, வேலையில் மிகவும் கவனமாக இருக்கனும் என எப்போதும் நான் விரும்புவேன் என அதில் தெரிவித்திருந்தார்.

Follow Us