Royapuram Constituency Election 2026: திமுக vs அதிமுக.. மீனவ சமுதாய மக்கள் நிறைந்த ராயப்புரம் தொகுதி யாருக்கு சாதகமாக இருக்கும்? | TV9 Tamil News

Royapuram Constituency Election 2026: திமுக vs அதிமுக.. மீனவ சமுதாய மக்கள் நிறைந்த ராயப்புரம் தொகுதி யாருக்கு சாதகமாக இருக்கும்?

Published: 

09 Mar 2026 14:14 PM

 IST

ராயபுரம் சட்டமன்ற தொகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ராயபுரம் சட்டமன்ற தொகுதி என்பது முக்கியமான தொகுதிகளில் ஒன்றாகும். இது வடசென்னையின் அரசியல் மற்றும் சமூக ரீதியாக முக்கியத்துவம் பெற்ற பகுதிகளில் ஒன்றாகும். மேலும், இது சென்னை வடக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இந்த ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 1.9 லட்சம் வாக்காளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 / 6ராயபுரம் சட்டமன்ற தொகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ராயபுரம் சட்டமன்ற தொகுதி என்பது முக்கியமான தொகுதிகளில் ஒன்றாகும். இது வடசென்னையின் அரசியல் மற்றும் சமூக ரீதியாக முக்கியத்துவம் பெற்ற பகுதிகளில் ஒன்றாகும். மேலும், இது சென்னை வடக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இந்த ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 1.9 லட்சம் வாக்காளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராயபுரம் சட்டமன்ற தொகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ராயபுரம் சட்டமன்ற தொகுதி என்பது முக்கியமான தொகுதிகளில் ஒன்றாகும். இது வடசென்னையின் அரசியல் மற்றும் சமூக ரீதியாக முக்கியத்துவம் பெற்ற பகுதிகளில் ஒன்றாகும். மேலும், இது சென்னை வடக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இந்த ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 1.9 லட்சம் வாக்காளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2 / 6

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ஐ. ட்ரீம் மூர்த்தி கிட்டத்தட்ட 64,424 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர், அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை கிட்டத்தட்ட 27,779 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

3 / 6

ராயபுரம் சட்டமன்ற தொகுதியை எடுத்துக் கொண்டால், 1977 ஆம் ஆண்டிலிருந்து அதிமுக ஐந்து முறையும், திமுக ஆறு முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதிமுகவைப் பொருத்தவரையில், ஜெயக்குமார் 1991, 2001, 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திமுகவில் பொன்னுரங்கம், மதிவாணன், தற்போது ஐ. ட்ரீம் மூர்த்தி ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

4 / 6

வடசென்னையின் பழமையான குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக ராயபுரம் விளங்குகிறது. இதில் மீனவ சமூக மக்கள் அதிகம் உள்ளனர். சென்னை துறைமுகம் மற்றும் ரயில் நிலையம் அருகே இருப்பதால் துறைமுகம் மற்றும் தொழிலாளர் வாழ்க்கை முறை இங்கு அதிகம் காணப்படுகிறது.

5 / 6

இந்த தொகுதியில் பொதுவாக மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு மக்கள் மத்தியில் முக்கிய பிரச்சினையாக முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு பருவமழைக் காலத்திலும் ராயபுரத்தில் பல்வேறு வீடுகளில் தண்ணீர் புகும் அவல நிலை இருந்து வருகிறது.

6 / 6

அதேபோல், மீனவர் சமுதாயம் அதிகம் இருப்பதால் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளும் மக்கள் தரப்பில் முன்வைக்கப்படுகின்றன.

Follow Us