Rakul Preet Singh: போன் கூட எடுக்கமாட்டார்கள்.. பாலிவுட் சினிமா அவமானம் குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்! | TV9 Tamil News

Rakul Preet Singh: போன் கூட எடுக்கமாட்டார்கள்.. பாலிவுட் சினிமா அவமானம் குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்!

Updated On: 

28 Jan 2026 20:38 PM

 IST

Rakul Preet Singh Exposes Bollywood Humiliation: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் ரகுல் ப்ரீத்சிங். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பாலிவுட் சினிமாவில் தான் சந்தித்த அவமானங்கள் குறித்தும், இயக்குநர் மற்றும் நடிகர்களின் அலட்சியம் குறித்தும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

1 / 5தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ரகுல் ப்ரீத்சிங். இவர் கடந்த 2009ம் ஆண்டில் 7 ஜி ரெயின்போ காலனி பட கன்னட ரீமேக்கான கில்லி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் நாயகியாக தனது நடிப்பை இவர் தொடங்கினார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ரகுல் ப்ரீத்சிங். இவர் கடந்த 2009ம் ஆண்டில் 7 ஜி ரெயின்போ காலனி பட கன்னட ரீமேக்கான கில்லி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் நாயகியாக தனது நடிப்பை இவர் தொடங்கினார்.

2 / 5

மேலும் இவர் தமிழ் சினிமாவிலும் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதீத பிரபலத்தை கொடுத்த படம் தீரன் அதிகாரம் ஒன்று. இப்படத்தை அடுத்தாக என்.ஜி.கே, இந்தியன் 2 மற்றும் அயலான் போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.

3 / 5

தற்போது இவர் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். மேலும் இவர் கடந்த 2021ல் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஜாக்கி பக்னானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் இவர், பாலிவுட் சினிமாவில் இவர் சந்தித்த அவமானங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

4 / 5

பாலிவுட் சினிமா குறித்து பேசிய நடிகை ரகுல் ப்ரீத்சிங் பகிர்ந்ததாவது, நான் தெலுங்கில் ஒரு பெரிய நடிகையாக இருந்தாலும், எனக்கு பாலிவுட்டில் ஒரு புதிய நகையாகத்தான் பார்த்தார்கள். மீண்டும் ஸீரோவிலிருந்து தொடங்கவேண்டியதிருந்தது. வெளியாட்கள் என்பதால் சிவப்பு கம்பளம் விரிப்புகள் கிடையாது. மேலும் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களும் ஒரு போன் செய்தல் கூட எடுக்கமாட்டார்கள்.

5 / 5

ஒரு படத்தின் ஆடிஷனுக்காக ஆபிஸ் ஒன்றில் கிட்டத்தட்ட பல மணிநேரமாக காத்திருந்தேன், இதுபோன்ற அவமானங்களை கொடுக்கும் சம்பவங்கள் எனக்கு மிகுந்த மன வலிமையை தந்தது என அவர் அந்த நேர்காணலில் பாலிவுட் சினிமாவில் நடந்த கசப்பான சம்பவம் குறித்து பேசியிருந்தார் நடிகை ரகுல் ப்ரீத்சிங்.