ஜனவரி 10-க்குள் பொங்கல் பரிசு தொக்குப்பு வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்! | TV9 Tamil News

ஜனவரி 10-க்குள் பொங்கல் பரிசு தொக்குப்பு வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

Updated On: 

27 Dec 2025 23:56 PM

 IST

Pongal Special Gift 2026 | ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் பணம் வழங்கப்படும். இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் சிறப்பு பரிசு ஜனவரி 10, 2026-க்கு வழங்கப்படும் என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

1 / 5ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அரசு கடந்த சில ஆண்டுகளாக பொங்கள் பரிசுடன் கூடிய சிறப்பு தொகையையும் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அரசு கடந்த சில ஆண்டுகளாக பொங்கள் பரிசுடன் கூடிய சிறப்பு தொகையையும் வழங்கி வருகிறது.

2 / 5

டிசம்பர் மாதம் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பொங்கள் சிறப்பு தொகுப்பு மற்றும் பரிசுக்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

3 / 5

பொங்கல் பரிசு தொடர்பான எதிர்ப்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய கைத்தரி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

4 / 5

அதாவது, தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு தற்போது தயாராக உள்ளது. அதன் விநியோகம் விரைவில் தொடங்க உள்ளது. அதன்படி, ஜனவரி 10, 2026-க்குள் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

5 / 5

இந்த பொங்கல் பரிசில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கரும்பு, திராட்சை, முந்திரி உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ஒவ்வொரு ஆண்டும் பணமும் வழங்கப்படும். இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு எவ்வளவு பணம் வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.